அப்படி போடு.. அட்லி- ஷாருக்கான் இணையும் புதிய இந்தி படத்தலைப்பு இது தானா? சூப்பர் தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் ராஜாரானி, மெர்சல், பிகில், தெறி படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லி.

Atlee Shahrukh Khan New Hindi Movie Tittled as Jawan

Also Read | 'விக்ரம்' படத்துல சூர்யா கேரக்டர் பேரு இது தானா? FDFS-ல் உற்சாகமான ரசிகர்கள்!

விஜய் நடிப்பில் பிகில் படம் தயாரான பொழுதே ஷாருக்கானுக்கு ஒரு கதை சொல்லி, ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனம் தயாரிப்பில் படம் இயக்க ஒப்பந்தமானார். இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று டீசர் மூலம் வெளியாகி உள்ளது.

அட்லி (Atlee) இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு புனேயில் தொடங்கி, மும்பை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷாருக்கானுக்கு (Shah Rukh Khan) ஜோடியாக நயன்தாரா (Nayanthara) நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Atlee Shahrukh Khan New Hindi Movie Tittled as Jawan

மேலும் தமிழில் பருத்திவீரன், ராவணன், தோட்டா, மலைக்கோட்டை போன்ற படங்களில் நடித்த நடிகை பிரியாமணி (Priyamani) ஒரு முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

Atlee Shahrukh Khan New Hindi Movie Tittled as Jawan

இந்த படத்திற்கு "Lion" என  தற்காலிகமாக தோராய (Tentative) தலைப்பு வைக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்திற்கு 'ஜவான்' 'Jawan' என பெயரிடப்பட்டுள்ளது. தலையில் பலத்த காயத்துடன், முகச்சிதைவுக்கு உள்ளாகி ஷாருக்கான் காட்சியளிப்பது போன்றும், கையில் துப்பாகியை எடுத்து அலைபேசியில் பேசுவது போன்றும், ரயில் முன் நின்று இருக்கும் காட்சியும் டீசரில் இடம் பெற்றுள்ளன.

Atlee Shahrukh Khan New Hindi Movie Tittled as Jawan

இந்த படம் பான் இந்திய படமாக தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

Also Read | “அந்த feeling-அ எப்படி சொல்றது… ரொம்ப மிஸ் பண்றேன்”… இந்த வாரம் விஜய் அம்மா சொன்ன குட்டி Story

தொடர்புடைய இணைப்புகள்

Atlee Shahrukh Khan New Hindi Movie Tittled as Jawan

People looking for online information on Atlee, Atlee Hindi Movie, Jawan, Shahrukh Khan will find this news story useful.