VTK D Logo Top
www.garudabazaar.com

BREAKING: அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்'.. தாறுமாறான சென்னை ஷூட்டிங் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் சென்னை ஷூட்டிங் குறித்த தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.

Atlee Shahrukh Khan Jawaan Movie Chennai Shooting Update

தமிழில் ராஜாரானி, மெர்சல், பிகில், தெறி படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லி. விஜய் நடிப்பில் 'பிகில்' படம் தயாரான பொழுதே ஷாருக்கானுக்கு ஒரு கதை சொல்லி, ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனம் தயாரிப்பில் ஒரு இந்தி படம் இயக்க ஒப்பந்தமானார். இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சிலநாட்களுக்கு முன் வெளியானது.

Atlee Shahrukh Khan Jawaan Movie Chennai Shooting Update

இப்படத்திற்கு 'ஜவான்' 'Jawan' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் போஸ்டர்கள் & டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு புனேயில் தொடங்கி, மும்பை சுற்றுவட்டார பகுதிகளில் நடந்தது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பையில் இருந்து சென்னைக்கு 7 நாட்கள் படப்பிடிப்பிற்காக 250க்கும் மேற்பட்ட பெண்கள் வந்துள்ளனர் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரமாண்டமான மற்றும் தீவிரமான சண்டைக் காட்சியை இந்த பெண்களை வைத்து படமாக்கவுள்ளார் அட்லி. அதன் பிறகு ஷாருக்கான் நடிப்பில் ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் படத்தின் சில முக்கிய காட்சிகளை 3 வாரங்கள் அட்லி படமாக்குகிறார் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் தமிழில் பருத்திவீரன், ராவணன், தோட்டா, மலைக்கோட்டை போன்ற படங்களில் நடித்த நடிகை பிரியாமணி, ஒரு முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி,  முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார். இந்த படம் பான் இந்திய படமாக தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் 2023 ஜூன் மாதம் 2 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

மேலும் செய்திகள்

Atlee Shahrukh Khan Jawaan Movie Chennai Shooting Update

People looking for online information on Atlee, Jawaan, Shahrukh Khan, SRK, Vijay Sethupathi will find this news story useful.