LIGER D Logo Top
www.garudabazaar.com

ஆஹா..பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பாகும் "கண்மணி ராம்போ கதீஜா".. எப்போ? எதுல?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

"காத்துவாக்குல ரெண்டு காதல்" திரைப்படம் பிரபல மலையாள டிவி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.

Vijay Sethupathi KRK Movie World Television Premiere on Asianet TV

Also Read | தமிழ் திரைப்பட இயக்குனர் மணி நாகராஜ் மரணம்.. பிரபல எடிட்டரின் நெகிழ்ச்சியான பதிவு

'நானும் ரௌடிதான்' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா - விஜய் சேதுபதி மூவரும் இரண்டாவது முறையாக இணைந்த படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்".

இவர்களோடு சேர்ந்து சமந்தாவும் இந்த படத்தில் இணைந்தார். மாஸ்டர் மற்றும் கோப்ரா ஆகிய படங்களின் தயாரிப்பாளர் லலித் குமார் வழங்க விக்னேஷ் சிவன்  தன்னுடைய ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக இப்படத்தை தயாரித்து இருந்தார்.

Vijay Sethupathi KRK Movie World Television Premiere on Asianet TV

இந்த படத்துக்கு விக்னேஷ் சிவனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  கடந்த மாதம்  ஏப்ரல் 28 அன்று இந்த படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

Vijay Sethupathi KRK Movie World Television Premiere on Asianet TV

இந்த படத்தில் காதீஜா எனும் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க, கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க, ராம்போ என்ற கதாபாத்திரத்தி விஜய் சேதுபதி நடித்தார்.

மலையாளத்தில் இந்த படம் "கண்மணி ராம்போ கதீஜா" என்ற பெயரில் வெளியானது. இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் கடந்த மே மாதம் 20 ஆம் தேதி முதல் வெளியாகி உள்ளது.

Vijay Sethupathi KRK Movie World Television Premiere on Asianet TV

இந்நிலையில் இந்த படம் மலையாளத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3:30 மணிக்கு ஏசியா நெட் டிவி சேனலில் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி உள்ளன.

 

Also Read | பிரபல டிவி சேனலில் தமிழில் ஒளிபரப்பாகும் KGF Chapter 2.. எப்போ? எதுல?

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Sethupathi KRK Movie World Television Premiere on Asianet TV

People looking for online information on Asianet TV, Kaathuvaakula Rendu Kadhal, KRK Movie Television Premiere, Nayanthara, Samantha ruth prabhu, Vijay Sethupathi, Vijay Sethupathi KRK Movie will find this news story useful.