www.garudabazaar.com
iTechUS

'அமரகாவியம்' இயக்குனருடன் அதர்வா இணையும் புதிய படம்..‌ ஷூட்டிங் தமிழ்நாட்ல இந்த ஊர்லயா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் தான் அதர்வா.

Atharva jeeva Shankar Movie shooting started in Rameswaram Deets

பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகமான அதர்வா,  பாலா இயக்கத்தில் பரதேசி படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் நடித்த ஈட்டி, கணிதன், இமைக்கா நொடிகள் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றவை. தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்களையும் அதர்வா கொண்டுள்ளார்.

கடைசியாக இவர் நடித்த ‘பட்டத்து அரசன்’ படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. ராஜ்கிரண், ராதிகா சரத்குமார், ஆர்.கே. சுரேஷ், ராஜ் அய்யப்பா, ஜெயப்பிரகாஷ், சிங்கம்புலி, பால சரவணன், ஜி.எம். குமார், துரை சுதாகர், கன்னட நடிகர் ரவி காளே, தெலுங்கு நடிகர் சத்ரு மற்றும் பலர் இந்த படத்தில் நடித்தனர்.

தற்போது நிறங்கள் மூன்று திரைப்படத்தில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா நடித்து வருகிறார். இந்நிலையில் ஈட்டி படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் எமன், அமரகாவியம் படங்களின் இயக்குனர் ஜீவா ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் துவங்கி உள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Atharva

தொடர்புடைய இணைப்புகள்

Atharva jeeva Shankar Movie shooting started in Rameswaram Deets

People looking for online information on Atharva will find this news story useful.