RRR Others USA
www.garudabazaar.com

சூர்யா - அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் படம்.. வெளியான Release தேதி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா தொற்றிற்கு பிறகான காலகட்டங்களில், ஓடிடி தளத்தில் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது.

arun vijay new movie oh my dog release date announced

"நானும் விஜய் ரசிகன் தான்.." பீஸ்ட் டிரைலர் பற்றி ஷாருக்கான் ட்வீட்.. அட்லீ கொடுத்த ரியாக்ஷன்

அது மட்டுமில்லாமல், திரையரங்குகள் திறக்காமல் இருந்த சமயத்தில், சில திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி தளத்திலும் வெளியாகி வந்தது.

அந்த வகையில், தமிழில் அடுத்ததாக நேரடி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் குறித்து அசத்தல் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அருண் விஜய் - அர்னவ்

நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு மத்தியில், நடிகர் அருண் விஜய் மற்றும் அவரது மகன் அர்னவ் விஜய் (அறிமுகம்) நடித்துள்ள "ஓ மை டாக்" (oh my dog) திரைப்படம், அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தினை நடிகர் சூர்யாவின்  "2D  என்டர்டெய்ன்மென்ட்" நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், இயக்குனர் சரோவ் ஷண்முகம் எழுதி இயக்கி உள்ளார்.

ஏற்கனவே சூர்யாவின் தயாரிப்பில், சூரரைப் போற்று, ஜெய்பீம், உடன்பிறப்பே, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் உள்ளிட்ட திரைப்படங்கள் நேரடியாக ப்ரைம் வீடியோவில் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த வரிசையில் தற்போது 'ஓ மை டாக்' திரைப்படமும் வெளியாகவுள்ளது.

 arun vijay new movie oh my dog release date announced

குடும்பத்தினர் கொண்டாடும் வகையில்..

ஏப்ரல் 21 ஆம் தேதி, இந்த திரைப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு  ஆகிய மொழிகளில், வெளியாகவுள்ளது. தாத்தா, அப்பா மற்றும் மகன் ஆகிய மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த கதாபாத்திரங்களின் புகழ்பெற்ற உண்மையான குடும்ப கதையாகும். மேலும், அர்ஜுன் கதாபாத்திரத்தில் வரும் அர்னவ் மற்றும் கண் பார்வையற்ற நாய்க்குட்டி சிம்பா பற்றிய நெகிழ வைக்கும் கதையாகவும் இது உருவாகியுள்ளது. குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் அனைவரும் பார்த்து மகிழக் கூடிய வகையிலும் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

'ஓ மை டாக்' படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசை அமைக்க, கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோடை விடுமுறை ஸ்பெஷலாக, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில், படத்தினை கண்டுகளிக்க குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் பேராவலுடன் உள்ளனர்.

மொட்டைத் தலையுடன் பிரபல நடிகை.. "ஏன் இப்டி?.." குழம்பிய ரசிகர்கள்.. நடிகை சொன்ன விளக்கம்

தொடர்புடைய இணைப்புகள்

arun vijay new movie oh my dog release date announced

People looking for online information on Arun Vijay, Arun Vijay New Movie, Nivas K Prasanna, Oh My Dog Movie, Oh My Dog Movie updates, Sarov Shanmugam, Suriya will find this news story useful.