RRR Others USA
www.garudabazaar.com

மொட்டைத் தலையுடன் பிரபல நடிகை.. "ஏன் இப்டி?.." குழம்பிய ரசிகர்கள்.. நடிகை சொன்ன விளக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமான சஞ்சனா கல்ராணி, கன்னடம், மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நிறைய திரைப்படங்கள் நடித்து மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனவர்.

sanjana galrani shared her photo with bald head

அதே போல, கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சஞ்சனா கலந்து கொண்டுள்ளார். மற்றொரு பிரபல நடிகையான நிக்கி கல்ராணியின் சகோதரி தான் சஞ்சனா கல்ராணி.

மேலும் கடந்த ஆண்டு, மருத்துவர் ஒருவரையும் சஞ்சனா கல்ராணி திருமணம் செய்து கொண்டார்.

sanjana galrani shared her photo with bald head

மொட்டைத் தலையுடன் புகைப்படம்

இதன் பின்னர், சமீபத்தில் அவர் கர்ப்பம் அடைந்துள்ளார். இன்னொரு பக்கம், சினிமாவிலும் பெரிய அளவில் அவர் தலை காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மொட்டைத் தலையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சஞ்சனா பகிர்ந்துள்ளார். மேலும், தான் ஏன் மொட்டை அடித்தேன் என்பது பற்றியும் சஞ்சனா கேப்ஷனில் விளக்கி உள்ளார்.

sanjana galrani shared her photo with bald head

கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும்

அதில், "பார்ப்பவர்களின் கண்களில் தான் அழகு உள்ளது. இதனால், நான் என் தலைமுடியை தியாகம் செய்துள்ளேன். நான் கடவுளிடம் கேட்டுக் கொண்டதை நடத்தியதற்காக, இதனை நான் நிறைவேற்றி உள்ளேன். வாழ்க்கையின் பல கடினமான சூழ்நிலைகளைக் கடந்து வந்த பிறகு, தற்போது மீண்டும் அவை அழகாக தெரிகிறது. வாழ்வின் இந்த கட்டத்திற்கு நான் கடவுளுக்கு போதுமான நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

என்னுடைய வேலைக்காக இருந்தாலும் சரி, விரைவில் என் வாழ்வில் வரப் போகும் என்னுடைய குழந்தைக்காக இருந்தாலும் சரி,  இப்படி தான் எனது நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள வேண்டுமென விரும்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

sanjana galrani shared her photo with bald head

தொடர்புடைய இணைப்புகள்

sanjana galrani shared her photo with bald head

People looking for online information on Instagram, Sanjana Galrani, Viral Post will find this news story useful.