RRR Others USA
www.garudabazaar.com

சூர்யா - பாலா படத்தில் இணைந்த கீர்த்தி ஷெட்டி! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யாவின் திரை வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய படம் நந்தா!

Actress Krithi Shetty Heroine for Suriya Bala Movie

இந்த படத்தை இயக்குனர் பாலா இயக்கி இருந்தார். நடிகர் அஜித்தை வைத்து எழுதப்பட்டு, முதல் லுக் போஸ்டர்கள் வெளியாகி, படப்பிடிப்பு தொடங்க இருந்த சமயத்தில் சில தயாரிப்பு காரணங்களால் நந்தா படப்பிடிப்பு நின்று போக, பின்னர் அஜித்திற்கு பதில் சூர்யா நடிப்பில் நந்தா படம் துவங்கியது.

பின்னர் சூர்யா - விக்ரமை வைத்து இயக்குனர் பாலா எடுத்த பிதாமகன் திரைப்படம் சூர்யாவின் அடுத்த பரிமாணத்தை காட்டியது. பின்னர் பாலா தயாரிப்பில் இயக்குனர் ரெட் சிங்கம்புலி இயக்கத்தில் மாயாவி படத்தில் நடித்தார் சூர்யா. 

Actress Krithi Shetty Heroine for Suriya Bala Movie

கடைசியாக பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் திரையரங்கில் வெளியான நாச்சியார் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. பின்னர் சியான் விக்ரமின் மகன் துருவை வைத்து தெலுங்கு அர்ஜூன் ரெட்டி ரீமேக்கான வர்மா திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் பல சர்ச்சைகளை கிளப்பியது.

பாலாவும் சூர்யாவும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைகின்றன. இத்ற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை நடிகர் சூர்யா சில நாட்களுக்கு முன் டிவிட்டரில் வெளியிட்டு இருந்தார். இந்த படத்தை சூர்யா ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

Actress Krithi Shetty Heroine for Suriya Bala Movie

இதில் மேலும் இந்த படத்தில் வெள்ளித்திரை திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விஜி வசனம் எழுதுகிறார் என தவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ராதாமோகனிடம் வசனகர்த்தாவாக பணியாற்றியவர். இவர் சமீபத்தில் ஜோதிகாவின் 36 வயதினிலே, ஜெயம் ரவியின் அடங்கமறு படங்களில் பணியாற்றியுள்ளார். கலை இயக்குனராக மாயப்பாண்டியும், எடிட்டராக  சதீஷ் சூர்யாவும் பணிபுரிகின்றனர்.

இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று (28.05.2022) முதல் கன்னியாகுமரியில் தொடங்கி உள்ளது. இந்த படத்தில் சூர்யாக்கு ஜொடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளார். இதனை புதிய அறிவிப்பு போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது. 

தொடர்புடைய இணைப்புகள்

Actress Krithi Shetty Heroine for Suriya Bala Movie

People looking for online information on Bala, G V Prakash, Krithi Shetty, Suriya, Suriya 41 will find this news story useful.