www.garudabazaar.com

சானியா மிர்சா & மகேஷ் பாபுவுடன் A.R. ரஹ்மான் செல்ஃபி..! இணையத்தை கலக்கும் வைரல் போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ. ஆர். ரஹ்மான்.

AR Rahman Selfie with Super Star Mahesh Babu and Sania Mirza

Images are subject to © copyright to their respective owners.

Also Read | பாடகி பிரகதி வாங்கிய புதிய விலையுயர்ந்த கார்.. விலை எவ்வளவு? இவ்வளவு ஸ்பெஷல் இருக்கா?!

தமிழ், இந்தி சினிமா படங்களின் வெற்றிக்கு A. R. ரஹ்மானின் இசை மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. குறிப்பாக  இந்தியில் ராக் ஸ்டார், லகான், தமாஸா, ரங்கீலா ஆகியன. தமிழில் நியூ, காதல் தேசம், காதலர் தினம், விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகியன.

சமீபத்தில் வெளியான படங்களான  மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன், கௌதம் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு, பார்த்திபனின் இரவின் நிழல், கோப்ரா, 99 சாங்ஸ் ஆகிய  படங்களில் ரஹ்மானின் இசை முக்கிய பங்கு வகித்தது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த படங்களின் அனைத்து பாடல்களும் மற்றும் பின்னணி இசை கோர்ப்புகளும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தன.

தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன், ஆடு ஜீவிதம், அயலான் மற்றும் கமல்ஹாசன் 234, லால் சலாம் ஆகிய படங்களில் ரஹ்மான் பணிபுரிந்து வருகிறார்.

AR Rahman Selfie with Super Star Mahesh Babu and Sania Mirza

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் மகேஷ் பாபுவின் மனைவி நம்ரதாவும் ரஹ்மானுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

AR Rahman Selfie with Super Star Mahesh Babu and Sania Mirza

Images are subject to © copyright to their respective owners.

சானியா மிர்சா, டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து ஐதராபாத் நகரில் அவருக்கு பிரிவு உபச்சார விழா நடந்தது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, அவருடைய மனைவி நம்ரதா கலந்து கொண்டனர்.

Also Read | AK62-க்கு பின் அஜித்தின் பைக் சுற்றுப்பயணம்.. மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட வைரல் தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

AR Rahman Selfie with Super Star Mahesh Babu and Sania Mirza

People looking for online information on AR Rahman, Mahesh Babu, Sania Mirza will find this news story useful.