www.garudabazaar.com

"துணிவு படத்தில் இதை எல்லாம் எதிர்பாருங்க".. நடிகை மஞ்சு வாரியர் EXCLUSIVE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துணிவு படம் குறித்து நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு நடிகை மஞ்சு வாரியர் பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

Manju Warrier Exclusive Interview about Thunivu Ajith Kumar

Also Read | மங்காத்தா & துணிவு படங்களுக்கு ரிலீஸ்ல இப்படி ஒரு கனெக்சன் இருக்கா? செம 😍

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு  நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம்  'துணிவு'.

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. .

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் இந்த  படத்திலும் நடித்துள்ளார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  துணிவு படத்தின் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

சமீபத்தில் வெளியான டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று 54 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை நடிகை மஞ்சு வாரியர் அளித்துள்ளார். துணிவு படத்தில் நடிகை மஞ்சு வாரியர் 'கண்மணி' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த பேட்டியில், "துணிவு படத்தில் ரசிகர்கள் எந்த விஷயங்களை எல்லாம் எதிர்பார்க்கலாம்?" என கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த மஞ்சு வாரியர், " அஜித் சாரை எப்படி பார்க்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுறீங்களோ அப்படி எதிர்பார்க்கலாம். துணிவு படத்தில் அஜித் சார் லுக் ரொம்ப நல்லா இருக்கு. என்னோட ஃபேவரைட் லுக் இது. டிரெய்லர்லயே பாத்துருப்பீங்க ரசிகர்களை ரொம்ப கவரும் மேனரிசம் அஜித் சார்ட்ட இருக்கிறது. அஜித் சார் & ஹெச். வினோத் சார் ரசிகர்களுக்கு ஒரு நல்ல பொழுதுபோக்கு படமா இது அமையும் என நம்புறேன்". என‌ மஞ்சு வாரியர் பதில் அளித்துள்ளார்.

Also Read | வந்துட்டான்யா வந்துட்டான்யா.. பிரபல OTT-யில் ரிலீஸாகும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்.. எப்போ?

"துணிவு படத்தில் இதை எல்லாம் எதிர்பாருங்க".. நடிகை மஞ்சு வாரியர் EXCLUSIVE! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Manju Warrier Exclusive Interview about Thunivu Ajith Kumar

People looking for online information on Ajith Kumar, Manju Warrier, Manju Warrier Exclusive Interview, Thunivu will find this news story useful.