உலக அளவில் அதிகம் சம்பாதிப்பவர்கள் ... ஹாலிவுட் நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ரஜினி பட நடிகர்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல போர்ப்ஸ் இதழ் வருடா வருடம் உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் டாப் 100 பிரபலங்கள் பட்டியலை வெளியிடு வழக்கம். அந்த வகையில் ஜூன் 2019 முதல் மே 2020 வரையிலான காலகட்டத்தில் அதிகம் சம்பாதித்தவர்களின் பட்டியல் தற்போது வெளியாகியிருக்கிறது

ஹாலிவுட் நடிகர்களை பின்னுக்கு தள்ளிய இந்திய நடிகர்akshay kumar only indian in forbes top 100 highest paid celebrities

அந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த நடிகர் அக்ஷய் குமார் 52வது இடம் பிடித்துள்ளார். அந்த பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்தியர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார். உலக அளவில் கடந்த ஜூன் 2019 முதல் மே 2020 வரை அவர் $48.5 மில்லியன் சம்பாதித்துள்ளார். அது இந்திய ருபாய் மதிப்பில் சுமார் 366 கோடி ரூபாயாகும்.

சென்ற வருடம் அவர் 33வது இடத்தில் இருந்த நிலையில் இந்த வருடம் அவர் 19 இடங்கள் பின்தங்கி 52வது இடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தை கைலி ஜென்னர் பிடித்துள்ளார்.இரண்டாவது இடத்தில் கான்யே வெஸ்ட் உள்ளார். அதற்கு அடுத்த இடங்களில் ரோஜர் பெடரர், கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்ஸி உள்ளிட்டவர்கள் பிடித்துள்ளனர். பிரபல ஹாலிவுட் நடிகர் 'ராக்' டுவைன் ஜான்சன் உலக அளவில் 10வது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட் நடிகர்களை பின்னுக்கு தள்ளிய இந்திய நடிகர்akshay kumar only indian in forbes top 100 highest paid celebrities

People looking for online information on Akshay Kumar, Forbes, Rich will find this news story useful.