www.garudabazaar.com

AK61 படத்துல இது தான் அஜித் கெட்டப்! FIRST LOOK உடன் படக்குழு வெளியிட்ட முதல் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: நடிகர் அஜித் - எச் வினோத் இணையும் புதிய படத்தின் முதல் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

Ajith Kumar H Vinoth AK 61 Movie First Look Image Released

'வலிமை' படத்தை தியேட்டர்ல பாக்க போற ரசிகர்களுக்கு வினியோகஸ்தர் ராகுல் கொடுத்த EXCLUSIVE அப்டேட்

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், அஜித் (Ajith Kumar) நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.  NKP படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அதே கூட்டணி வலிமை படத்தில் இணைந்தது.

வரும் பிப்ரவரி 24 அன்று இந்த படம் வெளியாக உள்ளது. வலிமை படம் 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலீசாகும் என புதிய போஸ்டர் மூலம் தயாரிப்பாளர் போனிகபூர் சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

இந்த படத்திற்கு இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.  கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார், சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Ajith Kumar H Vinoth AK 61 Movie First Look Image Released

நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் துவங்க உள்ளது. AK61 படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் 9 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது என்று நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

Ajith Kumar H Vinoth AK 61 Movie First Look Image Released

 

Ajith Kumar H Vinoth AK 61 Movie First Look Image Released

இந்நிலையில் படத்தின் முதல் லுக் உடன் போனிகபூர் டிவிட்டரில் போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில் கருப்பு வெள்ளையில் இருள் சூழ தாடியுடன் , காதில் கடுக்கனுடன் நடிகர் அஜித் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. AK61 படத்திற்கான முன் தயாரிப்பு என போனி கபூர் அறிவித்துள்ளார்.

'வலிமை' படத்தின் ஆந்திரா - தெலுங்கானா தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய பெரிய நிறுவனம்!

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar H Vinoth AK 61 Movie First Look Image Released

People looking for online information on Ajith Kumar, AK 61 Movie, அஜித்குமார், எச்.வினோத், போனிகபூர், H Vinoth will find this news story useful.