www.garudabazaar.com

'வலிமை' படத்தை தியேட்டர்ல பாக்க போற ரசிகர்களுக்கு வினியோகஸ்தர் ராகுல் கொடுத்த EXCLUSIVE அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: வலிமை படத்தின் வினியோகஸ்தர் ராகுல் நமது Behindwoods தளத்திற்கு வலிமை படம் பற்றிய Exclusive தகவலை கொடுத்துள்ளார்.

Distributor Raahul about Valimai Movie Audio System

தனுஷ் உடனான திருமண பிரிவுக்கு பின் பொது தளத்தில் முதல் முறையாக தனது பெயரை மாற்றிய ஐஸ்வர்யா!

நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'வலிமை' படம் 4 மொழிகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வலிமை படம் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று ரிலீசாக உள்ளது. அதனை முன்னிட்டு தமிழில் 'வலிமை' படம் சென்சாராகியது. CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது.

மேலும் இந்த படம் 178 (2:58) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டது. பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டது. வெளிநாட்டில் வலிமை படத்தினை திரையிட அந்தந்த நாடுகளின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டு வருகிறது.

சென்சார் செய்யப்பட்டாலும் படங்களின் காட்சியமைப்பை மாற்றாமல் சப்தம், இசை உள்ளிட்டவற்றை மாற்றலாம். இதற்காக வலிமை படத்தின் சவுண்ட் மிக்ஸிங் பணிகள் சென்னை ஃபோர் பிரேம்ஸ் சவுண்ட் கம்பெனியில் சில நாட்களுக்கு முன் நடந்தன. இந்த சவுண்ட் மிக்ஸிங்குக்கு தேசிய விருது வென்ற ஆடியோகிராபர் மேடயில் ராதாகிருஷ்ணன் ராஜகிருஷ்ணன் பணிபுரிகிறார்.

Distributor Raahul about Valimai Movie Audio System

ராஜகிருஷ்ணன் ஏற்கனவே நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றியவர். ரங்கஸ்தலம் (2018) திரைப்படத்திற்காக 2019 ஆம் ஆண்டில் சிறந்த ஒலிப்பதிவாளருக்கான தேசிய விருதை வென்றவர். கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் விருது, கேரள மாநில திரைப்பட விருதுகளை வென்றவர். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி மற்றும் மலையாளம் ஆகிய திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

Distributor Raahul about Valimai Movie Audio System

இந்நிலையில் வினியோகஸ்தர் ராகுல் பிரத்யேகமாக நமது BEHINDWOODS சேனலுக்கு அளித்துள்ள EXCLUSIVE செய்தியில் முக்கிய தகவலை கூறியுள்ளார். அதில், "தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகள் ஆடியோ சிஸ்டத்தை மேம்படுத்தியுள்ளன, ஆனால் சில இடங்களில் ஆடியோ லெவல்கள்/வால்யூம் சரியான ஒலி தரத்துடன் பொருந்தவில்லை. வலிமை படத்தின் ஆடியோ 11:1 ஒலி கலவையில் நன்றாக வந்துள்ளதால், படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு நல்ல அனுபவத்தை வழங்க திரையரங்க உரிமையாளர்களிடம் வலிமை படத்தின் ஒலி தரத்திற்கு ஏற்றவாறு திரையரங்க ஒலி அமைப்பை மாற்றி வைக்க நாங்கள்  கேட்டுக்கொண்டுள்ளோம்" - என ராகுல் தெரிவித்துள்ளார்.

'காலா' அஞ்சலி பாட்டீலுக்கு பா.ரஞ்சித் கொடுத்த அடுத்த வாய்ப்பு! மேடையில் நெகிழ்ந்த நடிகை

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Distributor Raahul about Valimai Movie Audio System

People looking for online information on Ajith Kumar, Boney kapoor, Dolby Atmos, H Vinoth, Valimai, Valimai FDFS, Valimai TICKET will find this news story useful.