www.garudabazaar.com

அட.. அஜித் பட நாயகி.. பிரபல டிவி சீரியலில் பரபரப்பு எண்ட்ரி.. மாஸ் ப்ரோமோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

TV Serials: தமிழ் தொலைக்காட்சியில் பல முன்னணி சேனல்களில் காலை முதல் இரவு வரை பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

Ajith Kumar Popular movie heroine entry in sun tv serial

டிவி சீரியல்கள்

காரணம் சினிமாவை போலவே சீரியல்களிலும் மக்களுக்கு ஆர்வம் அதிகம் என்பதுதான். இதேபோல் தினசரி வாழ்க்கையை சம்மந்தப்படுத்தும் குடும்ப மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளும் சீரியல்களில் அதிகமாக இருப்பதுவும் இதற்கு இன்னொரு காரணம்.

Also Read: காப்பி தூள் பிரச்சனையில் வனிதா அக்கா வெளியே போயிட்டாங்களா? ..  ப்ரோமோவுல ஏன் காணும்?.. என்ன ஆச்சு?

சீரியலில் பிரபல நடிகைகள்..

அத்துடன் முன்னணி திரைப்பட நடிகர் நடிகைகளையும் தற்போது வெப் சீரிஸ், சீரியல்களில் களமிறக்கி வருகின்றனர். இதேபோல் முந்தைய காலக்கட்டங்களை விடவும் இன்னும் குவாலிட்டியான முறையில் சீரியல்களின் அவுட்புட் வருவது குறிப்பிடத்தக்கது.  அப்படித்தான் தற்போது சன் டி.வி சீரியலில், நடிகர் அஜித் பட நாயகியை முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.

எதிர்நீச்சல். .

Ajith Kumar Popular movie heroine entry in sun tv serial

ஆம், சன் டிவியில் புதிதாக வரப்போகிற சீரியல் தான் ‘எதிர்நீச்சல்’. இந்த சீரியலை மிகவும் பிரபலமான கோலங்கள் சீரியலை இயக்கியவரும், மெட்டி ஒலி சீரியலில் நடித்தவருமான இயக்குனர் திருச்செல்வம் இயக்குகிறார். இது தொடர்பான ப்ரோமோவில் ஜனனி என்கிற பெண் தமது குடும்ப பெண்களை போலவே அவர்களின் இன்ஸ்பிரேஷனை எடுத்துக்கொண்டு சாதனை பெண்ணாக வளர வேண்டும் என விரும்புவதாக குறிப்பிடுகிறார். அப்போது அவரது குடும்ப பெண்கள் காட்டப்படுகின்றனர்.

அஜித் பட நாயகி..

Ajith Kumar Popular movie heroine entry in sun tv serial

இந்த சீரியலில் தான் அஜித் நடித்த வரலாறு உட்பட பல முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்த நடிகை கனிகா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆம், ஜனனி குறிப்பிடும் தம் குடும்ப பெண்களுள் ஒருவர் தான் கனிகா. 

Ajith Kumar Popular movie heroine entry in sun tv serial

தவிர இந்த சீரியலில் கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் அறிமுகமான ஹரிப்பிரியா, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொகுப்பாளினியாக கலக்கி வந்த பிரியதர்ஷினி (டிடியின் அக்கா பிடி) மற்றும் மதுமிதா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

எப்போது?

ஏற்கனவே இயக்குநர் திருச்செல்வத்தின் இயக்கத்திலான சீரியல்களுக்கு நல்லவரவேற்புகள் இருந்து வந்தன. பல வருடம் ஒளிபரப்பான திருச்செல்வம் சீரியலான கோலங்கள் சீரியலில் கலக்கிய தேவயானி மற்றும் அபிஷேக் தற்போது ஜீ தமிழில் புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் இணைந்து நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

Ajith Kumar Popular movie heroine entry in sun tv serial

இந்நிலையில் தான் திருச்செல்வம் இயக்கும் எதிர்நீச்சல் சீரியல் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக அதிகாரப்பூர்வ ப்ரோமோக்களுடன் கூடிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Also Read: தாமரை அக்கா எல்லாம் தெரியும்.. நடிக்காதீங்க.. பிரபல போட்டியாளர் போட்ட மார்க்!

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Popular movie heroine entry in sun tv serial

People looking for online information on 90s Kids, Ajith Kumar, Ajith Movie Heroine, AK, Metti Oli, Serial, Sun TV, Sun TV Serial, Thiruchelvam Serial, Varalaaru movie will find this news story useful.