www.garudabazaar.com

காதலர் தினத்தில்.. அசத்தல் அப்டேட் கொடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. வெளியான சர்ப்ரைஸ் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷும், இயக்குனரும், ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யாவும் கடந்த ஜனவரி மாதம், தாங்கள் பிரிந்து கொள்ளப் போவதாக, ஒரே நேரத்தில், தங்களின் சமூக வலைத்தள பக்கங்கள் வாயிலாக அறிவித்திருந்தனர்.

aishwarya rajinikanth released new video on valentines day

காதலர் தினத்தில் ரொமாண்டிக் சர்ப்ரைஸ்.. பனியே உறைந்து போகும் காதல் ப்ரபோஸ்.. Radhe Shyam Glimpse!

18 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் இருந்து இருவரும் பிரிந்து கொள்ளப் போவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் அறிவித்த நிகழ்வு, ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, இருவரும் தங்களின் திரைப்பட மாற்று இதர வேலைகளில், அதிக கவனம் செலுத்தி வந்தனர். அந்த வகையில் இயக்குனர் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில், ஒரு ரொமான்டிக் பாடல் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகிருந்தது.

இயக்குனர் ஐஸ்வர்யா

ஏற்கனவே, '3' மற்றும் 'வை ராஜா வை' ஆகிய திரைப்படங்களை ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். அதே போல, அவர் இயக்கிய 'சினிமா வீரன்' என்ற ஆவண படமும், கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. இதன்  பிறகு, ஐஸ்வர்யா இயக்கும் படங்கள் குறித்த தகவல்கள், பெரிய அளவில் வெளியாகவில்லை.

aishwarya rajinikanth released new video on valentines day

புது பாடல்

இதனைத் தொடர்ந்து, இயக்குனர் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில், ஒரு பாடல் தயாராகி வருவது பற்றி தகவல்கள் வெளி வந்தது. இந்த பாடல் வீடியோவிற்காக, ஐஸ்வர்யா தன்னுடைய குழுவினருடன் உரையாடும் புகைப்படங்களும், இணையத்தில் அதிகம் வைரலாகி இருந்தது. இதனிடையே, ஐஸ்வர்யாவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

பிரோமோ வீடியோ

தொடர்ந்து, பல நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட ஐஸ்வர்யா, மீண்டும் தன்னுடைய பாடலுக்கான வேலைகளில் இறங்கியிருந்தார். இந்நிலையில், காதலர் தினமான இன்று, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், புது பாடல் ஒன்றினை குறித்த புரோமோ வீடியோவை ஐஸ்வர்யா பகிர்ந்துள்ளார்.

தமிழில் அனிருத்

பாடலின் இசையமைப்பாளர் அன்கித் திவாரி என்பது பிரோமோ வீடியோ மூலம் உறுதியாகியுள்ளது. அதே போல, பல மொழிகளில் தயாராகும் இந்த பாடலை, தெலுங்கில் சாகரும், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த்தும், தமிழில் அனிருத்தும் பாடுகின்றனர். 'Pan India' வகையில் உருவாகும் இந்த பாடலை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள நிலையில், இதன் வீடியோ விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான முதல் படம் '3'. இதில் இடம்பெற்றிருந்த 'Why this Kolaveri di?' என்ற பாடல், சர்வதேச அளவில் ஹிட்டடித்திருந்ததது. அந்த வகையில், ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகும் இந்த புது பாடல் மீதான எதிர்பார்ப்பும், ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

தனது மனைவியான பிரபல நடிகைக்கு நடு ரோட்டில் முத்தம் கொடுத்த நடிகர்!

தொடர்புடைய இணைப்புகள்

aishwarya rajinikanth released new video on valentines day

People looking for online information on Aishwarya, Aishwarya Rajinikanth, இயக்குனர் ஐஸ்வர்யா, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், காதலர் தினம், Valentines Day will find this news story useful.