www.garudabazaar.com

Vedhika hot beach photo: சில்லுனு இளநீர்!.. கடற்கரையில் ஒய்யாரமாய் படுத்திருக்கும் நடிகை வேதிகா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Vedhika hot beach Photo: நடிகை வேதிகா கடற்கரையில் படுத்தபடி போஸ் கொடுத்திருக்கும் படு கிளாமரான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றன.

actress vedhika hot beach pics breaks internet நடிகை வேதிகா

நடிகை வேதிகா..

தமிழ் சினிமாவில் கடந்த 2006ஆம் ஆண்டு மதராசி என்கிற திரைப்படம் மூலம் தம்முடைய அறிமுக நடிப்பைக் கொடுத்து, தமிழில் தம்முடைய திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை வேதிகா. இந்த திரைப்படத்தை தொடர்ந்து வேதிகாவை, லாரன்ஸ் நடிப்பில் உருவான முனி திரைப்படத்தில் காணமுடிந்தது.

Also Read: அதென்னயா குறும்படம்?..  சோதிக்காதீங்கடா!.. #BiggBossUltimate-க்கு வரும் பிரபல போட்டியாளர்!

முனி, காஞ்சனா

லாரன்ஸ், ராஜ்கிரண் மற்றும் பலரது நடிப்பில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற பேய் படமான முனி திரைப்படத்தை தொடர்ந்து, லாரன்ஸூடன் மீண்டும் நடிகை வேதிகா கைகோர்த்தார். ஆம், மீண்டும் நடிகரும் நடன இயக்குநருமான லாரன்ஸ் நடிப்பில் உருவான காஞ்சனா திரைப்படத்தின் 3-ஆம் பாகத்தில் நடிகை வேதிகா நடித்திருந்தார்.

actress vedhika hot beach pics breaks internet நடிகை வேதிகா

இந்த திரைப்படம் ஏற்கனவே லாரன்ஸ், வேதிகா நடித்து வெளியான முனி திரைப்படத்தின் தொடர்ச்சியான தொடர்வரிசை பாகமாக உருவாகி வெளிவந்தது. இந்தத் திரைப்படத்தில் வேதிகா மீண்டும் லாரன்ஸூடன் இணைந்து, அப்படத்தின் 3 ஹீரோயின்களுள் ஒருவராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பரதேசி, காவியத்தலைவன்

இவற்றை தவிர் தமிழில் சாந்தனுவுடன் இணைந்து சக்கரக்கட்டி, சிம்புவுடன் இணைந்து காளை, அர்ருண் விஜய்யுடன் இணைந்து மலை மலை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த வேதிகா, அதன் பின்னர் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில்  உருவான பரதேசி திரைப்படத்தில் நடித்தார்.

Also Read: Rolls Royce tax விவகாரத்தில் விஜய் பற்றி நீதிபதியின் எதிர்மறை கருத்து.. சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான பரதேசி திரைப்படத்தில் தம்முடைய அனாயாசமான  நடிப்பை நடிகை வேதிகா வெளிப்படுத்தி இருந்தார். ஆம், அந்த திரைப்படத்தில் அங்கம்மா என்கிற கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கும் வகையில் வேதிகா நடித்திருந்ததாக பாராட்டப்பெற்றார்.

actress vedhika hot beach pics breaks internet நடிகை வேதிகா

இதேபோல் வசந்தபாலன் இயக்கத்தில் நடிகர்கள் சித்தார்த் மற்றும் பிரித்விராஜ் நடிப்பில் உருவான காவியதலைவன் திரைப்படத்தில் தம் அழுத்தமான நடிப்பை வேதிகா பதித்திருந்ததை காண முடிந்தது. தொடர்ந்து பாலிவுட்டிலும் வேதிகா எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.

Also Read: ஷில்பா, ரிச்சர்டு கெர் 2007 முத்த சர்ச்சை!.. மும்பை நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

சில்லுனு இளநீர்.. வேதிகாவின் கடற்கரை ஃபோட்டோ..

இந்த நிலையில்தான் வேதிகா தம்முடைய சமூக வலைப்பங்கங்களில் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே மிகவும் தீவிரமாக வைரலாகி வருகின்றன. நடிகை வேதிகா தமது சமூக வலைதளங்களில் தமது திரைப்படங்கள் தொடர்பான அப்டேட்களை அவ்வப்போது பதிவிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் கடற்கரையோரம் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வேதிகா பகிர்ந்திருக்கிறார்.

கடற்கரையில் ஒய்யாரமாய்.. நடிகை வேதிகா!

actress vedhika hot beach pics breaks internet நடிகை வேதிகா

இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த படங்களை பகிர்ந்து வருகின்றனர். கடற்கரை ஓரம் அமர்ந்தபடியும், ஒய்யாராமாய் படுத்தப்படியும் நடிகை வேதிகா கொடுத்திருக்கும் இந்த போஸ்கள், அருகில் வைக்கப்பட்டிருந்த இளநீர், பின்னணியில் இருக்கும் கடற்கரை காட்சிகள் உள்ளிட்ட அனைத்தும் இந்த புகைப்படங்களுக்கு அழகு சேர்க்கும் வண்ணம் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து இந்த இந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

Also Read: ஹன்சிகாவின் 50வது படம்.. கௌரவ தோற்றத்தில் சிம்பு? ரிலீஸ் விஷயத்தில் பரபரப்பு அப்டேட்..!

actress vedhika hot beach pics breaks internet நடிகை வேதிகா

People looking for online information on Actress Vedhika, Actress Vedhika Hot Beach Pics, Vedhika will find this news story useful.