www.garudabazaar.com

Samantha : "என்னை பாதித்த விஷயங்கள்.." நடிகை சமந்தாவின் உருக்கமான பதிவு.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சமந்தாவின் போஸ்ட் ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Actress Samantha Latest Instagram Post Goes Viral

                        Images are subject to © copyright to their respective owners.

சமந்தா  தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்‌. விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார். ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. கடைசியாக தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து இருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

சமீபத்தில் நடிகை சமந்தா நடித்த யசோதா படம் கடந்த ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி வெளியானது. வாடகைத் தாயாக நடிகை சமந்தா இந்த படத்தில் நடித்திருந்தார். தற்போது சமந்தா கதாநாயகியாக நடிக்க “சாகுந்தலம்” திரைப்படம்  உருவாகி வருகிறது. பான் இந்திய படமாக உருவாகும் இந்த படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி தெலுங்கு, இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாக உள்ளது. சகுந்தலம் திரைப்படத்தை இயக்குனர் குணசேகர் எழுதி இயக்குகிறார்.

இசையமைப்பாளர் மணிசர்மா இப்படத்திற்கு இசையமைக்கிறார். Gunaa DRP - Teamworks சார்பில் நீலிமா குணா,  இப்படத்தை தயாரிக்கிறார். வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு, சகுந்தலம் படத்தை வழங்குகிறார். இந்த படத்தில் மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில்," வயதாகும் வேளையில் நான் அதிக தூரத்தை கடந்து செல்கிறேன். எல்லா அன்புக்கும் பாசத்திற்கும்... ஒவ்வொரு புதிய நாளுக்கும் அது தரும் எல்லா நல்ல விஷயங்களுக்கும் நான் நன்றியை உணர்கிறேன். என்னை பாதித்த விஷயங்கள். இனி அது வேண்டாம். ஒவ்வொரு நாளும் அன்பு மற்றும் நன்றியின் அலை எழட்டும். நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

 

Tags : Samantha

தொடர்புடைய இணைப்புகள்

Actress Samantha Latest Instagram Post Goes Viral

People looking for online information on Samantha will find this news story useful.