www.garudabazaar.com

நடிகர் விமல்.. சைலண்ட்டா ஒரு சம்பவத்த பண்ணிருக்காரே!.. ரிலீஸ் தேதியுடன் வெளியான போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை. 02, பிப்வரி 2022 :- தமிழ் சினிமாவில் எதார்த்த நாயகனாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விமல். பசங்க, களவாணி என பல திரைப்படங்களில் நடித்த விமல் அதற்கு முன்பும் கூட பல திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் தலை தோன்றியிருக்கிறார்.

actor vimal starring Vilangu ZEE5 OTT Release date official

‘களவாணி’ விமல் (Vimel)

இவற்றில் களவாணி திரைப்படம் விமலுக்கு மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் தனக்கே உரிய இயல்பான உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பால் எதார்த்த நாயகனாகவும் பக்கத்து வீட்டு பையனாகவும் அனைவரையும் கவர்ந்தார் நடிகர் விமல். இதனைத் தொடர்ந்து பல்வேறு கிராமத்துக் கதைகள் மற்றும் நகர கதைகளில் நடித்த விமல், காமெடி மற்றும் குடும்ப சென்டிமென்ட் திரைப்படங்களிலும் நடித்தார்.

Also Read: கைகோர்க்கும் அமீர் & வெற்றிமாறன்!.. போஸ்டர்ல இருக்குற அந்த 3வது நபர் யாரு?!

எதார்த்த நாயகன்

என்.ராகவன் இயக்கத்தில் விமல் நடித்த மஞ்சப்பை திரைப்படம், சுந்தர்.சி-யின் இயக்கத்தில் விமல் நடித்த கலகலப்பு திரைப்படம் உள்ளிட்ட திரைப்படங்கள் அவருடைய எதார்த்த நடிப்பை கவனிக்க வைத்த படங்களாக அமைந்தன. இதேபோல் நடிகர் விமல் நடித்த வாகை சூட வா திரைப்படம் அவருடைய மாறுபட்ட நடிப்பையும் வெளிக்காட்ட உதவியது. தவிர, நன்றாகவே காமெடி பண்ணும் நடிகர் விமல், ‘மன்னர் வகையறா’ உள்ளிட்ட திரைப்படங்களில் ஆக்ஷனிலும் இறங்கினார்.

நடிகர் விமலின் புதிய சீரிஸ்

தற்போது நடிகர் விமல் நடித்திருக்கும் புதிய சீரிஸின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இந்த போஸ்டரை பார்க்கும்போது, படம் சீரியஸாகவும் கிட்டத்தட்ட த்ரில்லர் வகையில் இருப்பது போன்றும் தெரிகிறது. இந்த சீரிஸின் தலைப்பும் அழுத்தமான தலைப்பாக தெரிகிறது.

ஓடிடியில் வெளியீடு

ஆம், நடிகர் விமல் நடிக்கும் புதிய பட சீரிஸின் ரிலீஸ் பற்றிய தகவல் தான் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி நடிகர் விமல் நடித்துள்ள  ‘விலங்கு’ சீரிஸின் first look போஸ்டருடன் இந்த சீரிஸ் வெளியாகும் தேதி, ஓடிடி ரிலீஸ் தகவல் உள்ளிட்ட அனைத்து விபரங்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

அதிகாரப்பூர்வ ரிலீஸ் அறிவிப்பு

அதன்படி,  ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இந்த சீரிஸை இயக்குநர் பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கியிருக்கிறார். இவருடன் இணைந்து இந்த படத்தில் பால சரவணன், முனீஷ்காந்த், இனியா உள்ளிட்டோர் நடித்துள்ளதாக தெரிகிறது. இந்த சீரிஸ் வரும் பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் சீரிஸ் பிரத்தியேகமாக ஸ்ட்ரீம் ஆகத் தொடங்குகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை ZEE5 ஓடிடி அறிவித்துள்ளது.

Also Read: ரிஹானா கர்ப்பமா? சாலையில் BabyBump- உடன் கெத்துநடை.. உலகமே தேடும் அந்த ‘காதலர்’ இவர்தான்!

தொடர்புடைய இணைப்புகள்

actor vimal starring Vilangu ZEE5 OTT Release date official

People looking for online information on விமல், விலங்கு, Vilangu, Vimel, Zee5 will find this news story useful.