www.garudabazaar.com

'தளபதி 65'க்காக மீண்டும் நடிகர் விஜய்யுடன் ஜோடி சேருகிறாரா தமன்னா ? - பரவும் தகவல் - உண்மை என்ன ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'மாஸ்டர்' படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'தளபதி 65' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாத நிலையில், நாளுக்கு நாள் பல்வேறு தவகல்கள் பரவி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக தமன்னா நடிப்பதாக தகவல் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் எங்கள் தரப்பில் இந்த தகவல் குறித்து விசாரித்த போது அந்த தகவல் முற்றிலும் பொய்யானவை என தெரியவந்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு தமன் இசையமைக்கிறார். மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் கொரோனா பிரச்சனைகள் முடிந்த பிறகு அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி, தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Vijay may not pair up with Tamannaah for AR Murugadoss' Thalapathy 65 | தளபதி 65க்காக விஜய்யுடன் தமன்னா ஜோடி சேரவிருப்பதாக வெளியான தகவல் கு�

People looking for online information on AR Murugadoss, Tamannaah Bhatia, Thalapathy 65, Vijay will find this news story useful.