காதலியை மணக்கும் பிரபல நடிகர் - வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல்
முகப்பு > சினிமா செய்திகள்மக்களின் மனம் கவர்ந்த பிரபலங்களின் திருமணங்கள், நிச்சயதார்த்த நிகழ்வுகள், குழந்தை பிறப்பு போன்ற தகவல்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் தளபதி விஜய்யின் உறவினரும் மாஸ்டர் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகளுக்கும், அதர்வாவின் தம்பிக்கும் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
![Popular actor engaged with her girl friend Pic goes Viral ft Punith Pathak | காதலியை மணக்கும் பிரபல நடிகர், வைரலாகும் புகைப்படங்கள் Popular actor engaged with her girl friend Pic goes Viral ft Punith Pathak | காதலியை மணக்கும் பிரபல நடிகர், வைரலாகும் புகைப்படங்கள்](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/popular-actor-engaged-with-her-girl-friend-pic-goes-viral-ft-punith-pathak-photos-pictures-stills.jpg)
அதன் ஒரு பகுதியாக பாலிவுட்டில் பிரபல நடன இயக்குநர் நடிகர் என்ற பண்முகம் கொண்ட புனித் பதக்கிற்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. நிச்சயதார்த்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், புதிய துவக்கம் என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். புனித் பதக் பாலிவுட்டில் ஏபிசிடி, ஏபிசிடி 2, ஸ்ட்ரீட் டான்ஸர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.