www.garudabazaar.com

"லவ் யூ அப்பா".. மறைந்த தனது தந்தை பற்றி நடிகர் மகேஷ்பாபுவின் உருக்கமான பதிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று மக்களால் கொண்டாடப்படும் நடிகர் கிருஷ்ணா கடந்தவாரம் மரணமடைந்தார். இந்நிலையில், அவரது மகனும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவருமான மகேஷ்பாபு தனது தந்தை பற்றி உருக்கமான பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார்.

Actor Mahesh Babu Emotional Post about his late Father

Also Read | "நான் அப்படி சொல்லவே இல்ல.. ஆனா நீங்க..".. ஜனனி - விக்ரமன் இடையே நடந்த வாக்குவாதம்.. Biggboss6

தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவருடைய தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணா கட்டமனேனி கடந்த 14 ஆம் தேதி காலை ஹைதராபாத்தில் உள்ள கான்டினென்டல் மருத்துவமனையில் மாரடைப்பின் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். ICU -வில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் அடுத்தநாள் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

Actor Mahesh Babu Emotional Post about his late Father

80 வயதான கிருஷ்ணா, இதுவரையில் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராகவும் மக்கள் இவரை கொண்டாடுகின்றனர். கிருஷ்ணா கடைசியாக 2016 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான ஸ்ரீ ஸ்ரீ இல் நடித்திருந்தார்.கிருஷ்ணா நடிகர் மட்டும் அல்லாது வெற்றிகரமான இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்தார். திரையுலகில் இவருடைய பங்களிப்பை பாராட்டும் விதமாக 2009 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 1980-களில் காங்கிரஸில் சேர்ந்து எம்.பி.யானார். ஆனால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மறைவுக்குப் பிறகு அரசியலில் இருந்து விலகினார்.

Actor Mahesh Babu Emotional Post about his late Father

இந்நிலையில், நடிகர் மகேஷ்பாபு தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தந்தையின் பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அவர் எழுதியுள்ள பதிவில்,"உங்கள் வாழ்க்கை கொண்டாடப்பட்டது... உங்கள் மறைவு இன்னும் கொண்டாடப்படுகிறது... அதுதான் உங்கள் மகத்துவம். நீங்கள் உங்கள் வாழ்க்கையை அச்சமின்றி வாழ்ந்தீர்கள்... துணிச்சலும் தைரியமும் உங்கள் இயல்பு. எனது உத்வேகமாக நீங்கள் இருந்தீர்கள். நான் எதிர்பார்த்திருந்தது அனைத்தும் அப்படியே மறைந்துவிட்டன. ஆனால் வினோதமாக, இதுவரை நான் உணராத இந்த வலிமையை என்னுள் உணர்கிறேன்... இப்போது நான் அச்சமின்றி இருக்கிறேன்... உங்களது ஒளி என்றென்றும் என்னுள் பிரகாசிக்கும்... உங்களது மரபை முன்னெடுத்துச் செல்வேன்... உங்களை மேலும் பெருமைப்படுத்துவேன். … லவ் யூ அப்பா.. மை சூப்பர் ஸ்டார்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த பதிவு ரசிகர்களை கண்கலங்க செய்திருக்கிறது.

Also Read | "பழம், தயிரை எல்லாம் அவரே எடுத்து சாப்பிடுறாரு".. நூதன கேஸுடன் வந்த தனலட்சுமி.. இவரு மேல தானா..?

தொடர்புடைய இணைப்புகள்

Actor Mahesh Babu Emotional Post about his late Father

People looking for online information on Mahesh Babu, Mahesh Babu about his late Father, Mahesh Babu Emotional Post will find this news story useful.