Sinam D Logo Top
www.garudabazaar.com

"பாகுபலி" இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த படம்..!! ‌‌ இந்த ஜானரா?! செம்ம..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் அடுத்த திரைப்படத்தின் ஜானர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Rajamouli Super Star Mahesh Babu SSMB29 Movie GENRE Update

Also Read | மகன்களுடன் தியேட்டர்ல படம் பார்க்கும் தனுஷ்.. என்ன படம் தெரியுமா? பரவும் வீடியோ!

சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு  தற்போது  திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸுடன் ஒரு  ஆக்‌ஷன் என்டர்டெய்னர் படத்தில் நடித்து வருகிறார்,  எஸ்எஸ்எம்பி 28 என்ற இந்த திரைப்படத்தின்  படப்பிடிப்பு நேற்று முதல் துவங்கி உள்ளது.

இந்த SSMB 28 படத்தை தொடர்ந்து, இன்று வரை பிளாக்பஸ்டர்களை மட்டுமே வழங்கிய இந்தியாவின் முன்னணி இயக்குனர் எஸ்எஸ் ராஜமௌலியுடன் மகேஷ் பாபு அடுத்த படத்தில் இணைவார் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Rajamouli Super Star Mahesh Babu SSMB29 Movie GENRE Update

RRR படத்தின் மூலம் மாபெரும் வெற்றி பெற்ற பிறகு,  மகேஷ் பாபு படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் ராஜமௌலி ஈடுபட்டுள்ளார். மகேஷ் பாபுவுடன் தான் இயக்கும் படம் உலக அளவிலான ஆக்‌ஷன் அட்வென்சர் வகைமையில் இருக்கும் என்று ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ராஜமௌலி அமெரிக்காவில் நடக்கும் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு தனது சில திரைப்படங்கள் திரையிடப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Rajamouli Super Star Mahesh Babu SSMB29 Movie GENRE Update

செய்தியாளர்களிடம் பேசிய ராஜமௌலி அடுத்து இயக்கப் போகும் படத்தின் வகைமையை (Action - Adventure) வெளிப்படுத்தி உள்ளார்.

இந்த படத்தின் கதை உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. மகேஷ் பாபு தனது பல படங்களில் அதிரடி வேடங்களில் நடித்துள்ளார், ஆனால் கமர்ஷியல் சினிமாவின் ராஜாவாக இருக்கும் ராஜமௌலி சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை ஒரு புது விதமான பாத்திரத்தில் காட்டப் போகிறார்.

Rajamouli Super Star Mahesh Babu SSMB29 Movie GENRE Update

திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்த பிறகு இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கும்.

Also Read | VIDEO: "AK61 LOADING"..ஹெலிகாப்டரில் அஜித்! பிரபல வில்லன் நடிகர் பகிர்ந்த வைரல் புகைப்படங்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

Rajamouli Super Star Mahesh Babu SSMB29 Movie GENRE Update

People looking for online information on Mahesh Babu, SS Rajamouli, SSMB29 Movie, SSMB29 Movie Updates will find this news story useful.