மோடியின் உரை குறித்து கமல்ஹாசன் அதிரடி - '' அவர்களை உதாசினப்படுத்தியவர் பதவி இழப்பர்''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியாவில் நேற்று (24.03.2020) நள்ளிரவு 12 மணி முதல் கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் நோக்கில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதன் காரணமாக மக்கள் அனைவரும் தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.

நரேந்திர மோடியின் உரை குறித்து கேள்வி எழுப்பிய கமல்ஹாசன் | Actor Kamal Haasan Questioned about Prime Minister Narendra Modi's Latest statement about C

இதற்கு ஆதரவாக பல்வேறு அரசியல் தலைவர்கள் திரையுல பிரபலங்கள் சமூக வலைதளப்பக்கத்தின் வாயிலாக கருத்து தெரிவித்து வந்தனர். திமுக தலைவர் முக ஸ்டாரலின் தனது ட்விட்டர் பக்கத்தில் நரேந்திர மோடியின் அறிவிப்பை மனப்பூர்வமாக ஏற்பதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில், அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க. பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே. அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Entertainment sub editor