RRR Others USA
www.garudabazaar.com

‘வாத்தி’ இயக்குனருக்கு வாழ்த்து –ஸ்கூல் பையன் கெட்டப்பில் தனுஷின் viral pic!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிக்கும் முதல் தமிழ்- தெலுங்கு இருமொழி படமாக வாத்தி / sir திரைப்படம் உருவாகி வருகிறது.

Actor dhanush wished vaathi director with viral pic

"நானும் விஜய் ரசிகன் தான்.." பீஸ்ட் டிரைலர் பற்றி ஷாருக்கான் ட்வீட்.. அட்லீ கொடுத்த ரியாக்ஷன்

முதல் இருமொழிப் படம்…

தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்  நிறுவனம் தயாரிக்கும் புதிய படமான ’வாத்தி’ யில் தனுஷ் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாக உள்ளது.  இந்த படத்திற்கு தெலுங்கில் சார் (Sir) என்று பெயர் வைக்கப்பட்டுள்ள்ளது. தேசிய விருது வென்ற எடிட்டர் நவீன் நூலி எடிட்டிங் செய்கிறார். இந்த படத்திற்கு G V பிரகாஷ் இசையமைக்கிறார். இது தனுஷ் நடிக்கும் முதல் இரு மொழிப் படமாக உருவாகி வருகிறது. இதன் பிறகு தனுஷ் சேகர் கமுலா இயக்கும் மற்றொரு நேரடி இந்தி படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor dhanush wished vaathi director with viral pic

வாத்தி…. மாணவன்….

கல்வித்துறையை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாவதை போஸ்டர் மூலம் அவதானிக்க முடிகிறது. மேலும் படத்தில் தனுஷ் மாணவன் மற்றும் ஆசிரியர் என இரண்டு கெட்டப்களில் நடிக்கலாம் எனவும் தெரிகிறது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2022 ஜனவரி 5 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஒப்பந்தமான பிரபல ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் படத்தில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.

Actor dhanush wished vaathi director with viral pic

தனுஷின் வாழ்த்து…

இதையடுத்து தற்போது இன்று பிறந்தநாள் கொண்டாடும் வாத்தி படத்தின் இயக்குனர் வெங்கட் அட்லூரிக்கு நடிகர் தனுஷ் டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அது சம்மந்தமான ட்வீட்டில் ‘ என்னுடைய முதல் தமிழ்- தெலுங்கு படமான வாத்தி(sir) இயக்குனர் வெங்கட் அட்லூரிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்’ எனக் கூறியுள்ளார். மேலும் அந்த ட்வீட்டோடு வெங்கட்டுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் தனுஷ் ஸ்கூல் பையன் கெட்டப்பில் இருக்கிறார். அந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actor dhanush wished vaathi director with viral pic

மொட்டைத் தலையுடன் பிரபல நடிகை.. "ஏன் இப்டி?.." குழம்பிய ரசிகர்கள்.. நடிகை சொன்ன விளக்கம்

தொடர்புடைய இணைப்புகள்

Actor dhanush wished vaathi director with viral pic

People looking for online information on Dhanush, GV Prakash Kumar, Samyuktha Menon, Vaathi, Vaathi director, Venky Atluri will find this news story useful.