www.garudabazaar.com

"வாழ்த்து" சொன்ன தனுஷ்க்கு நன்றி சொல்லி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போட்ட வைரல் பதிவு..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பயணி ஆல்ப வெளியீடை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.

Aishwarya Rajinikanth reply to dhanush wish

சர்ச்சையான கதையா இருக்கு… எடுபடுமா? ரசிகரின் கமெண்ட்டுக்கு ‘நச்’ விளக்கம் கொடுத்த RJ பாலாஜி

தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷை காதலித்து 18 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார். அந்த தமபதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். இல்லற வாழ்க்கையினூடே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைப்பட இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். தனுஷ் நடிப்பில் ‘3’ என்ற படத்தையும் கௌதம் கார்த்திக் நடிப்பில் ’வை ராஜா வை ‘ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். அதன் பிறகு அவர் இயக்கியுள்ள பயணி ஆல்பம் தற்போது வெளியாகியுள்ளது.

Aishwarya Rajinikanth reply to dhanush wish

9 ஆண்டுகளுக்குப் பிறகு ஐஸ்வர்யாவின் இயக்கத்தில்…

இந்த ஆல்பத்தின் படப்பிடிப்பின் போதுதான் ஐஸ்வர்யா கொரோனா பாதிப்புக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். சிகிச்சையில் குணமான அவர் வீடு திரும்பினார். இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மேலும் அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களோடு அவர் மகளிர் தினத்தைக் கொண்டாடிய புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். அங்கிருந்த படியே தொடர்ந்து பயணி ஆல்பத்தின் அப்டேட்களை வெளியிட்டு வந்தார்.

Aishwarya Rajinikanth reply to dhanush wish

சூப்பர் ஸ்டார்கள் வெளியிட்ட பயணி ஆல்பம்

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தற்போது இந்த பாடலை ரஜினிகாந்த் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழில் ரஜினிகாந்த் வெளியிட்டது போல மலையாள வெர்ஷனை மோகன்லால் மற்றும் தெலுங்கு வெர்ஷனை அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு ஆகியோர், இந்த பாடலை வெளியிட்டுள்ளனர். இந்த பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே 'பயணி'யை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த தனுஷ், "உங்கள் மியூசிக் வீடியோவிற்கு வாழ்த்துக்கள் ஃப்ரண்ட். கடவுள் அருள் புரியட்டும்" என தன்னுடைய ட்வீட்டில் தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.

Aishwarya Rajinikanth reply to dhanush wish

தனுஷுக்கு நன்றி

விவாகரத்து அறிவிப்புக்குப் பின் ஐஸ்வர்யாவின் ஆல்பத்துக்கு தனுஷ் வாழ்த்து தெரிவித்தது கவனத்தை ஈர்த்தது. தனுஷின் அந்த பதிவுக்கு நன்றி தெரிவித்துள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ‘நன்றி தனுஷ்.. godspeed’ எனப் பதிலளித்துள்ளார். Godspeed என்ற வார்த்தைக்கு தெய்வீகம், கடவுள் அருள் புரியட்டும், உங்கள் பயணத்துக்கு வாழ்த்துகள்.. உங்களுக்கு அதிர்ஷ்டம் கிட்டட்டும் என பல பொருள்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 21 ஆம் தேதி 11.07 மணிக்கு.... செம்ம அப்டேட் கொடுத்த கேஜிஎப் 2 படக்குழு!

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rajinikanth reply to dhanush wish

People looking for online information on Aishwarya Rajinikanth, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ், தனுஷ் ஐஸ்வர்யா, Dhanush, Dhanush wish, Tweet will find this news story useful.