COBRA D Logo Top
www.garudabazaar.com

VIDEO: இனி Dr.யுவன் ஷங்கர் ராஜா... கௌரவித்த பல்கலைக் கழகம் - நெகிழ்ந்த மனைவி!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் யுவன் ஷங்கர் ராஜா.

yuvan receieved his doctorate from satyabama university

அவர் இசை அமைப்பாளராக அறிமுகமாகி, 25 ஆண்டுகள் கழிந்த நிலையில், காமெடி, லவ், இன்ஸ்பயரிங், சோகம் என அனைத்து ஏரியாவிலும் இசை மூலம் பூந்து விளையாடவும் செய்து வருகிறார்.

அது மட்டுமில்லாமல், அவரது பாடல்கள் பலவும் ரசிகர்களுக்கு பெரும் மருந்தாக இருந்து வருவதுடன் பலரது பிளேலிஸ்ட்டையும் ஆக்கிரமித்து வருகிறது.

தொடர்ந்து, ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை கட்டிப் போட்டு வரும் யுவன் ஷங்கர் ராஜா, சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடி இருந்த நிலையில், அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள், தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். அந்த வகையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுடன் ட்விட்டர் தளத்தில் கலந்துரை ஆடி இருந்தார் யுவன் ஷங்கர் ராஜா.

yuvan receieved his doctorate from satyabama university

ரசிகர்களின் பல அசத்தலான கேள்விகளுக்கு யுவன் கூறி இருந்த பதில், ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்திருந்தது.

இந்நிலையில், தொடர்ந்து தனது இசையால் ரசிகர்களின் மனதை ஆக்கிரமித்து வரும் யுவனுக்கு சத்யபாமா பல்க்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. முன்னதாக, இதனை சத்யபாமா பல்கலைக்கழகம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது நடந்த பட்டமளிப்பு விழாவில் டாக்டர் பட்டத்தினை யுவனுக்கு வழங்கி உள்ளது.

yuvan receieved his doctorate from satyabama university

ஏராளமான மாணவ, மாணவிகள் பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த நிலையில், டாக்டர் பட்டம் பெற்ற யுவன் சங்கர் ராஜாவை சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட ஏரளாமானோர் வாழ்த்தி வருகின்றனர். அதே போல, விழா அரங்கில் இருந்த யுவன் சங்கர் ராஜாவின் மனைவி, கணவர் டாக்டர் பட்டம் பெறும் போது, மிகவும் சந்தோசத்துடன் புகைப்படங்கள் எடுத்தது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

VIDEO: இனி DR.யுவன் ஷங்கர் ராஜா... கௌரவித்த பல்கலைக் கழகம் - நெகிழ்ந்த மனைவி!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

yuvan receieved his doctorate from satyabama university

People looking for online information on Doctorate, Satyabama University, Yuvan Shankar Raja will find this news story useful.