'பட்டாசாக' வெளியான 'ஹிப் ஹாப் தமிழாவின்' அடுத்த பட FIRST LOOK!! .. ‘கெட் அப்’ வேற லெவல்!
முகப்பு > சினிமா செய்திகள்பாடகரும் இசையமைப்பாளருமாக இருந்து, நடிகராகவும் பரிணாமம் எடுத்த ஹிப்ஹாப் தமிழாவின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் அடுத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இதுவரை மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்களில் நாயகனாக நடித்துள்ளார் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா. இதில் மீசைய முறுக்கு திரைப்படத்தை ஹிப் ஹாப் தமிழா எழுதி இயக்கி நடித்து இசையமைத்திருந்தார்.
Very Happy to Release the First Look Poster of #SivakumarinSabadham #HHTENT @SathyaJyothi_ pic.twitter.com/2QT6lwv54D
— Hiphop Tamizha (@hiphoptamizha) February 10, 2021
இந்நிலையில் ஹிப்ஹாப் தமிழா எழுதி, இயக்கி, நடித்து, இசையமைத்து, சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் ஹிப் ஹாப் தமிழா எண்டர்டெயின்மெண்ட் கூட்டுத் தயாரிப்பில் ‘சிவகுமாரின் சபதம்’ படம் உருவாகியுள்ளது.
இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தான் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு அர்ஜூன் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த புதிய பட போஸ்டரில் ஹிப் ஹாப் தமிழாவின் தோற்றம் முந்தைய படங்களில் இருந்து மாறுபட்டு இருப்பதால் ரசிகர்களிடையே படத்தின் மீது எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.