www.garudavega.com

"ஒரு சிறு மனஸ்தாபம்.. முன்னாடியே தெரிஞ்சிருந்தா..." - 'லாக்கப்' படம் பற்றி நடிகர் உடைத்த சம்பவம்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் நிதின் சத்யா அவர்களது தயாரிப்பில், வைபவ், வெங்கட் பிரபு, வாணி போஜன், பூர்ணா, மைம் கோபி, விஜய் முத்து ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும் படம் 'லாக்கப்'. இயக்குனர் மோகன் ராஜாவின் இணை இயக்குனர், SG சார்லஸ் இயக்கி இருக்கிறார்.

இளம் நடிகர் பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம் அந்த நடிகரின் மனசு யாருக்குமே வராதுYoung actor shares an heartwarming incident

இந்தப் படத்தில் நடித்த இளம் நடிகர் ஜெய் ஆனந்த் உணர்ச்சிப்பூர்வமான பதிவிட்டுள்ளார். அதில் "தயாரிப்பாளர் திரு. நிதின் சத்யா அவரை படத்தில் தான் பார்த்திருக்கிறேன். ஆனால் நேரில் அறிமுகம் இந்தப் படம் மூலம்தான். படத்தில் எனக்கு சம்பள விஷயத்தில் ஒரு சிறிய மனஸ்தாபம் ஏற்பட்டபோது தயாரிப்பாளர் நிதின் சத்யா அவர்களே எனக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினார். இந்த விஷயம் என் கவனத்துக்கு வரல. முன்னாடியே தெரிஞ்சிருந்தா உடனே க்ளியர் பண்ண சொல்லிருப்பேன்.

என்கிட்ட சொல்லாம அவங்களே சால்வ் பண்ண நெனச்சு லேட் பண்ணிட்டாங்க. மனசுல வச்சுக்காதீங்க ப்ரதர். No hard feelings என்று சொன்னதோடு, அடுத்த அரை மணி நேரத்தில் மீதமிருந்த சம்பளத்தை அவரே அக்கவுண்டில் கிரெடிட் செய்தார். எனக்குத் தெரிந்து வேறு எந்த தயாரிப்பாளரும் இத்தனை டவுன் டூ எர்த்தாக இருப்பார்களா என்று தெரியாது. போன பத்து வருடத்தில் இந்த கம்பெனி, சன் பிக்சர்ஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி தவிர்த்து வேறு எந்த கம்பெனியும் எனக்கு பேசிய சம்பளத்தை அப்படியே கொடுத்தது கிடையாது" என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

லாக்கப் படத்தின் டிரெய்லர் இதோ :

"ஒரு சிறு மனஸ்தாபம்.. முன்னாடியே தெரிஞ்சிருந்தா..." - 'லாக்கப்' படம் பற்றி நடிகர் உடைத்த சம்பவம்...! வீடியோ

Entertainment sub editor