மணிரத்னம் படம்... கிரிக்கெட்டர் கனவு - கவிஞர் அவதாரம்..! நடிகர் சொல்லும் சீக்ரெட்ஸ்.
முகப்பு > சினிமா செய்திகள்இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில், தனா இயக்க, சரத்குமார், ராதிகா சரத்குமார், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டின், சாந்தனு மற்றும் பலர் நடிக்கும் 'வானம் கொட்டடடும்' படத்தின் பாடல்களை சிவா ஆனந்த் எழுதியுள்ளார். அப்படத்தின் பாடல்கள் எழுதிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதாவது:-

இத்திரைப்படத்தின் மூலம் முதல்முறையாக பாடலாசிரியர் அவதாரம் எடுத்துள்ளேன். கிரிக்கெட் வீரராக ஆக வேண்டும் என்பதே என் கனவாக இருந்தது. பாடலாசிரியராக ஆவேன் என கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. 'வானம் கொட்டட்டும்' படத்தின் இயக்குநர் தனாவுடன் சிறந்த அனுபவமாக இருந்தது. தனா, மணிரத்தினம் மற்றும் சித்ஸ்ரீராம் ஆகியோர்களின் ஊக்கத்தால் சிறப்பாகவும், சுலபமாகவும் இப்படத்தில் பாடல்களை இயற்ற முடிந்தது.
ஒரு பாடலாசிரியருக்கு போதிய இடைவெளியும், சுதந்திரமும் இருந்தால் மட்டுமே அப்பாடல் வரிகள் சிறப்பாக அமையும். இந்தப் படத்தில் எனக்கு அது இருந்தது. சித் ஸ்ரீராமின் இசை இந்தப் படத்தில் இருக்கும் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டும் வண்ணம் அமைந்திருக்கிறது. எதிர்காலத்தில் பாடலாசிரியராகவே இருப்பேனா என்பது தெரியாது. தனா மற்றும் சித் ஶ்ரீராம் இருவருடனும் பணியாற்றியது மிகுந்த ஆரோக்கியமாக இருந்தது' என அவர் கூறியுள்ளார். சிவா ஆனந்த் மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்தில் ஜோதிகாவின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.