www.garudabazaar.com

ஆரி அடுத்து 'இதைத்தான்' செய்வாரு... ஏன் ரம்யா 'எப்பவுமே' இப்படித்தானா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் வழக்கம்போல டாஸ்க் ஒன்றை கொடுத்து அதற்கு மாட்டுனியா என பெயர் வைத்தார். உண்மையில் யார் மாட்டிக்கொண்டது என்பது இனிமேல் தான் தெரியவரும். ஷிவானி கேட்ட கேள்வி ஒன்றுக்கு ஆரி பதிலளிக்க முயன்றபோது என் குடும்பத்தை பத்தி இழுக்காதீங்க என கூறினார். ஆனால் ஆரி தன்னுடைய கருத்தை நிறுத்தவில்லை. ஒருகட்டத்தில் கோபம் அதிகமாகி அனிதா கத்த சக போட்டியாளர்கள் ஆரியை பேச வேண்டாம் என்று கூறினர்.

Why Ramya Pandian always against for Aari Arjunan?

இதையடுத்து இதுகுறித்து அனிதா, ரம்யாவிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது நான் தனியா சொன்ன விஷயத்தை அவர் அங்க வந்து சொல்றாரு என அனிதா கலங்க, ரம்யா அவருக்கு ஆதரவாக பேசினார். அப்போது ரம்யா, ''இங்க பேசிட்டு அடுத்ததா அவர் கேமரா கிட்டத்தான் போய் பேசுவாரு என கூறினார். அதேபோல அடுத்த காட்சியில் ஆரி கேமரா முன்னால் சென்று மன்னிப்பு கேட்டார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் எப்படி இவ்ளோ கரெக்டா சொன்னீங்க? என வியந்து போய் சில்லரையை சிதறவிட்டு வருகின்றனர்.

அதே நேரம் ரம்யா, ஆரிக்கு எதிராக கருத்துக்களை முன்வைக்கிறார் என ஆரி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வீட்டில் என்ன நடந்தாலும் அதற்கு ஆரி தான் காரணம் என்பது போல ரம்யா பேசுவதாக கூறுகின்றனர். மேலும் ஆரியைத்தான் அனைவரும் நாமினேட் செய்து இருப்பார்கள் என ரம்யா சொன்னதும் இந்த பிரச்சினைக்கு எண்ணெய் ஊற்றி இருக்கிறது. இதனால் இரு ஆர்மிக்காரர்களும் சமூக வலைதளங்களில் மோதிக்கொள்ள ஆரம்பித்து இருக்கின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Why Ramya Pandian always against for Aari Arjunan?

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.