www.garudabazaar.com

"உனக்கும் எனக்கும் ஒரு விஷயம் நடந்தா அவனை (ராஜூ) ஏன் பாதிக்குது?".. பாவனியிடம் அபினய் ஆதங்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில், கோரியோகிராஃபர் அமீர் மற்றும் நடிகர் சஞ்சீவ் உள்ளிட்டோர் புதிதாக இணைந்துள்ளனர். இதனை அடுத்து அனைவரும் ட்ரூத் ஆர் டேர் விளையாடினர்.

why raju affect something with you and me abhinay to Pavani

எப்போதும் ராஜூ பேசுவதை அனைவருமே விரும்புவார்கள். அதற்கு காரணம் ராஜூ எதைச் சொன்னாலும் சர்ச்சைக்குள்ளாகாமல், அவற்றை நகைச்சுவையாக சொல்வதுதான்.

why raju affect something with you and me abhinay to Pavani

ஆனாலும் ராஜூ கோவப்படாமல் இருப்பதால், அபினய் ராஜூவுக்கு டம்மி பீஸ் என்கிற விருதை பிக்பாஸ் விருது வழங்கும் டாஸ்கில் கொடுத்தார். இதேபோல், பாவனிக்கும் தாமரைக்கும் இடையில் ஏற்பட்ட உரசல்களின் போது, ராஜூ தாமரைக்கு சப்போர்ட் செய்து பேசியுள்ளார்.

why raju affect something with you and me abhinay to Pavani

இப்படி இருக்க, இந்த ட்ரூத் ஆர் டேர் சேலஞ்சில் ராஜூ, அபினயிடம், “பாவனியை லவ் பண்றியா?” என கேட்டார். அதற்கு அனைவரும் அதிர்ந்தனர். அபினயையும் “என்னடா கேக்குற?” என கூறிவிட்டார். அதன் பின் ஐக்கி, இமான் என அனைவரும் ராஜூவிடம், “ஏன் இப்படி கேட்ட?” என்றதும், “அதுதான் டேர் அவர் இல்லை என்றால் இல்லை என சொல்லலாம். அதானே கேம்?” என பதில் கூறினார்.

why raju affect something with you and me abhinay to Pavani

இதன் பிறகு பிரியங்கா, அபிஷேக், நிரூப் உள்ளிட்டோர் முன்னிலையில், பாவனி - அபினய் தொடர்பாக தான் கேள்வி கேட்ட அந்த செயல் சரியா என ராஜூ கருத்து கேட்டார்.  அப்போது அபிஷேக், “அதை அவர்கள் தான் பேச வேண்டும். இது முடிந்துவிட்டது. விட்டுவிடுங்கள்” என்று கூற, பிரியங்காவோ, ராஜூவை பார்த்து “நீ செஞ்சது கேவளமான செயல்தான். கல்யாணம் ஆன அபினயை பார்த்து அப்படி கேட்பது தவறு, அது அவரை எவ்விதத்தில் பாதிக்கும் என்று கல்யாணம் உனக்கு தெரியாதா” என கேட்டார்.

why raju affect something with you and me abhinay to Pavani

பின்னர் நிரூப்பிடம் அபினய் இதே விவகாரம் குறித்து பேசும்போது, “ராஜூ நகைச்சுவையை பாவனிக்கு எதிரான ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறான். மிரர் டாஸ்க்கில் இருந்தே பாவனியை கஷ்படுத்தும் வேலையை ராஜூ செய்து வருகிறான்” என்று கூறினார்.

why raju affect something with you and me abhinay to Pavani

ஆனால் நிரூப்போ, “ராஜூ அப்படி கேக்கணும்னு டக்குனு யோசிக்காம கேட்டுட்டான். அது தப்புதான். ஆனா அவன் அதை உள்நோக்கத்துடன் செய்யவில்லை” என்று கூறினார்.

why raju affect something with you and me abhinay to Pavani

இந்நிலையில் இதுகுறித்து அபினயிடம் பேசிய பாவனி, “நான் முன்பே உங்களிடம் அப்படியான ஃபீலிங் இருக்கிறதா? என கேட்டுவிட்டேன். அதற்கு நீங்களே பதில் சொல்லிவிட்டீர்கள். அதற்கு பிறகு இவருக்கு என்ன?” என சொல்லிக் கொண்டிருந்தார்.

why raju affect something with you and me abhinay to Pavani

இதற்கு பாவனியிடம் பதிலுக்கு பேசிக்கொண்டிருந்த அபினய், “அப்படியே உனக்கும் எனக்கும் ஒரு விஷயம் நடக்குதுனா, அது அவனை(ராஜூவை) எந்த விதத்தில் பாதிக்கின்றது?” என்று கூறினார்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

why raju affect something with you and me abhinay to Pavani

People looking for online information on Abhinay, Abhishek raaja, பாவனி ராஜூ, பிக்பாஸ் பாவனி அபினய், பிக்பாஸ் ரம்யா கிருஷ்ணன், ராஜூ அபினய், BiggBoss Ramya Krishnan, BiggBoss5, Biggbosstamil, BiggBossTamil5, Niroop, Pavani, Pavni, Priyanka, Raju, Raju jeyamohan, Ramya Krishnan, Truth or Dare will find this news story useful.