www.garudabazaar.com

“தாமரை-ட்ட எல்லாரும் ஏமாறுறாரங்க.. ஆனா அவங்க டெரெர்!!”.. கொளுத்திப் போட்ட புது போட்டியாளர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: “தாமரைக்கிட்ட எல்லாருமே ஏமாறுறீங்க..  டெரராக இருக்காங்க.. அறியாமையெல்லாம் இல்லை. சரியாக காய் நகர்த்துகிறார்.. அவங்க மேல ஒரு பரிதாபத்தை உண்டாக்க விரும்புறாங்க”.. என்று அமீர் பேசிய பேச்சு மொத்த டீம் மேட்ஸ்களையும் யோசிக்க வைத்திருக்கிறது.

tamarai Selvi character is not real BiggBossTamil5 contestent

பிக்பாஸ் 5வது சீசனில் சவலான போட்டியாளர்களில் ஒருவராக தாமரை இருக்கிறார். அவருக்கு  ஏராளமான ரசிகர்கள் ஆதரவாக இருக்கிறார்கள். தாமரையின் கிராமத்து வெள்ளந்தியான குணம், இயல்பாக எல்லோரிடமும் நடந்து கொள்வது என ரசிகர்களை கவர்கிறார். அதேநேரம் அவரது செயல்பாடுகளை விமர்சிக்கவும் அதிகமானோர் இருக்கிறார்கள். சக டீம்மேட்ஸ்களும் விமர்சனங்களை எழுப்பி வருகிறார்கள்.

tamarai Selvi character is not real BiggBossTamil5 contestent

இந்நிலையில்  பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது வைல்டு கார்டு என்ட்ரி ஆக அறிமுகமாகி உள்ளவர் பிரபல விஜய் டிவி கோரியோகிராஃபர் அமீர்.  அவர் தாமரையைப் பற்றிய பேசிய வார்த்தைகள் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தி உள்ளது.  வந்த இரண்டு நாட்களில் இவர் என்ன இப்படி சொல்லுறார் என்று  தாமரையின் ஆதரவாளர்கள் ஒரு பக்கம் அமீருக்கு எதிராக கருத்துக்களை கூறுகிறார்கள். மறுபக்கம்  அமீர் சொல்வது சரிதான் தாமரையின் இயல்பான குணம் அமீர் சொல்வது போலத்தான் இருக்கிறது என்று அமீருக்கு சிலர் ஆதரவும் கொடுத்துள்ளார்கள்.

tamarai Selvi character is not real BiggBossTamil5 contestent

நடனக்கலைஞரான தாமரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அறிமுகமாவதற்கு முன்பு வரைக்கும் யாருக்கும் அவ்வளவாக தெரியாது.. ஆனால் தற்போது அவர் பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். ஒரு கிராமத்திலிருந்து அடித்தட்டில் உள்ள மக்களில் ஒருவராக இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருப்பதால் பலருக்கும் இவர் மீது நல்ல அபிப்ராயம் உள்ளது.

tamarai Selvi character is not real BiggBossTamil5 contestent

இந்த சூழலில் அமீர் பேசும் போது, “தாமரைக்கிட்ட எல்லாருமே ஏமாறுறீங்க..  டெரராக இருக்காங்க.. அறியாமையெல்லாம் இல்லை. சரியாக காய் நகர்த்துகிறார்.. அவங்க மேல ஒரு பரிதாபத்தை உண்டாக்க விரும்புறாங்க..” என்று பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

tamarai Selvi character is not real BiggBossTamil5 contestent

அண்மையில் காயின் விஷயத்தில் இவரிடம் சுருதி, பாவனி நடந்துகொண்டதை பார்த்து காண்டாகி  ரசிகர்கள் சுருதி மீதும் பாவனி மீது கோபப்படுவது ஒரு புறம் நடந்து வருகிறது.  தாமரை விளையாடி வெற்றி பெற வேண்டும் என்று பலர் விருப்பங்களை தெரிவித்துக் கொண்டிருக்கும் நிலையில், அமீரின் கருத்து ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.

tamarai Selvi character is not real BiggBossTamil5 contestent

இதனிடையே இணையத்தில், ஒரு ரசிகர் தனது பதிவில்,  “எக்ஸாட்டாக என் மைண்ட் வாய்ஸ் அப்படியே சொல்றீங்க அமீர்.. வில்லேஜ்ல இருந்து வந்தது,  கல்வி அறிவு இல்ல.. இதெல்லாம் சொல்லி சொல்லியே பாவம் ஆக காட்டி ஓட்டு வாங்குறாங்க. எப்ப பாரு யாராச்சும் கிட்ட கத்தி கத்தியே மத்தவங்க பரிவுல பாவமா தெரிஞ்சுக்குலாம்னு மாஸ்டர் பிளான் போட்டு வந்து இருக்கு இந்த லோட்டஸ் அக்கா!” என்று கூறியுள்ளார். இதற்கு சிலர் ஆதரவும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்

தொடர்புடைய இணைப்புகள்

tamarai Selvi character is not real BiggBossTamil5 contestent

People looking for online information on Aamir, Ameer, Ameer blaming Thamarai Selvi, Amirs comments, அமீரின் கருத்து, அமீர், அமீர்க்கு ஆதரவு கொடுக்கும் ரசிகர்கள், தாமரை, தாமரைச்செல்வி, தாமரைச்செல்வியை குறை கூறிய அமீர், பிக் பாஸ் 5, பிக் பாஸ் தமிழ், பிக் பாஸ் ப்ரமோ, பிக்பாஸ், Bigg boss, Bigg Boss 5, Bigg Boss Promo, Bigg Boss Tamil, Fans supporting Aamir. பிக் பாஸ், Lotus Selvi, Tamarai will find this news story useful.