www.garudabazaar.com

கமலுக்கு பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது இவரா? பரவும் தகவல்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசனை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.

popular actress to host biggbosstamil5 instead of kamal deets

இதனிடையே அவருக்கு திடீரென கொரோனா தொற்று ஏற்பட்டதாக உறுதிசெய்யப்பட்டது. முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களை நடிகர் கமல்ஹாசன் வெற்றிகரமாக தொகுத்து வழங்கினார். தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் கிட்டத்தட்ட 50 நாட்கள் கடந்து ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

popular actress to host biggbosstamil5 instead of kamal deets

இவற்றில் கமல்ஹாசனின் பங்கு முக்கியமானது. வார இறுதியில் போட்டியாளர்களை அகம் டிவி வழியே சந்தித்து அவர்களின் நிறை, குறைகளை சுட்டிக் காட்டுவதுடன், அவருக்கே உரிய பாணியில் அவர்களுக்கு அறிவுரை கூறுவதுமாக இருந்து வந்தார்.

popular actress to host biggbosstamil5 instead of kamal deets

இதேபோல் வாரம் ஒருமுறை மக்கள் படிக்க வேண்டும் என்று, தான் நினைத்த பல நல்ல புத்தகங்களையும் பரிந்துரைப்பார். சில சமயம் சிறப்பு தகவல்களையும் கூறுவார்.

popular actress to host biggbosstamil5 instead of kamal deets

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் அமெரிக்க பயணம் சென்று விட்டு, சென்னைக்கு திரும்பி வந்த போது அவருக்கு கொரோனா தொற்று உண்டானதாக அறிகுறி இருந்ததை அடுத்து, அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

popular actress to host biggbosstamil5 instead of kamal deets

அவருக்கு சுவாசப் பாதை தொற்று ஏற்பட்டதாகவும் மருத்துவமனையிலிருந்து அறிக்கைகள் வெளியாகி இருந்தன. எனினும் அவரது உடல்நலம் தேறி வருவதாக நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் தெரிவித்திருக்கிறார்.

popular actress to host biggbosstamil5 instead of kamal deets

தொடர்ந்து திரைத்துறையில் இருந்து ரஜினிகாந்த், இளையராஜா உள்ளிட்ட பிரபலங்கள் கமலின் உடல்நிலையை கேட்டறிந்து வருகின்றனர்.

popular actress to host biggbosstamil5 instead of kamal deets

இந்தநிலையில் கமல்ஹாசனின் இடத்திலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து தொகுத்து வழங்கி, வழிநடத்தப் போவது யார் என்கிற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்து வந்தது. இதனிடையே கடந்த இரண்டு வாரங்களாக விஜய்சேதுபதி, சிம்பு அல்லது ஸ்ருதிஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாகவும் பேசப்பட்டு வந்தது.

popular actress to host biggbosstamil5 instead of kamal deets

இந்நிலையில் பிரபல நடிகையும், படையப்பா பாகுபலி உள்ளிட்ட பல திரைப்படங்களின் மூலம் ஏகோபித்த தென்னிந்திய ரசிகர்களின் வரவேற்பையும் பெற்ற நடிகை ரம்யா கிருஷ்ணன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று தற்போது கூறப்பட்டு வருகிறது.

popular actress to host biggbosstamil5 instead of kamal deets

எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. நடிகை ரம்யா கிருஷ்ணன் முன்னதாக பிக்பாஸ் போட்டியாளர்களை வைத்து, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த BB ஜோடிகள் என்கிற நிகழ்ச்சியில் நடிகர் நகுலுடன் இணைந்து நடுவராக பங்கேற்று வந்தார்.

popular actress to host biggbosstamil5 instead of kamal deets

பிக்பாஸ் வீட்டை பொருத்தவரை தற்போது ஏற்கனவே நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி ஆகியோர் எலிமினேட் ஆகி இருந்தனர். அவர்களில் அபிஷேக் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

popular actress to host biggbosstamil5 instead of kamal deets

முன்னதாக விஜய் டிவியின் கோரியோகிராஃபர் அமீர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைந்தார். இதேபோல் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரும், பிரபல நடிகருமான சஞ்சீவ் தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

popular actress to host biggbosstamil5 instead of kamal deets

People looking for online information on பிக்பாஸை தொகுத்து வழங்குகிறாரா ரம்யா கிருஷ்ணன், பிக்பாஸ் ரம்யா கிருஷ்ணன், ரம்யா கிருஷ்ணன், Biggboss ramyakrishnan, BiggBoss5, Biggbosstamil, BiggBossTamil5, Kamalhaasan biggboss, Kamalhaasan health, Kamalhassan biggboss, Kamalhassan health, Kamalhassanhealth, Raja matha biggboss, Ramya krishnan biggboss, Ramyakrishnan will find this news story useful.