கணவர் நாக சைதன்யாவை பிரிந்த சமந்தா! விவாகரத்து செய்கிறாரா? அவரே அறிவித்த தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சமந்தா, தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகையாக விளங்குபவர்.

actress samantha actor naga chaitanya divorced

இவர் மாஸ்கோவின் காவேரி படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பானா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், தெறி, கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல இரண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார்.

actress samantha actor naga chaitanya divorced

விண்ணை தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும்போது சமந்தாவும் நாக சைதன்யாவும் காதல் வயப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இருவரும் 2017ல் கிறிஸ்தவ முறைப்படியும் இந்து மத முறைப்படியும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் விவாகரத்து செய்யப்போவதாக பல செய்திகள் பல மாதங்களாக வந்தவண்ணம் இருந்தன.

actress samantha actor naga chaitanya divorced

நடிகை சமந்தா தற்போது ஒரு பரபரப்பான அறிக்கையை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில் தனது கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக சமந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் இருவரும் தனி தனி பாதைகளில் பயணம் செய்யப்போவதாகவும், 10 ஆண்டு நட்பு அவ்ர்கள் வாழ்வில் நல்ல பிணைப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும், மேலும் மீடியா, ரசிகர்கள் இந்த கடினமான காலத்தில், எங்கள் பிரைவசியை மதிக்குமாறும் நடிகை சமந்தா கேட்டுக்கொண்டுள்ளார்.

 

 

 

நடிகை சமந்தா தெலுங்கு எபிக் திரைப்படமான சகுந்தலம் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். குணசேகர் இயக்கி இருக்கும் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

தொடர்புடைய இணைப்புகள்

actress samantha actor naga chaitanya divorced

People looking for online information on Naga chaitanya, Samantha will find this news story useful.