"என்ன... இந்த மாதமே ஷூட்டா"... சிவகார்திகேயனின் "டான்"! அட்டகாசமான அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டாக்டர்' மற்றும் 'அயலான்' படங்களைத் தொடர்ந்து, சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் "டான்".

"What shoot this month" Sivakarthikeyan's "Don"! Awesome update!

லைகா நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பூஜையுடன் தொடங்கியது. முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்த  படக்குழு கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பை நிறுத்தியது.

"What shoot this month" Sivakarthikeyan's "Don"! Awesome update!

இப்படத்தில் நாயகியாக பிரியங்கா அருள் மோகன், வில்லனாக எஸ்.ஜே.சூர்யா முக்கியமான கதாபாத்திரங்களில்  சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காளி வெங்கட், பால சரவணன், ஆர்.ஜே.விஜய், சிவாங்கி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.  இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக கே.எம்.பாஸ்கரன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிகிறார்கள்.

"What shoot this month" Sivakarthikeyan's "Don"! Awesome update!

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு முடிந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி வருகிற ஜூலை 15ஆம் தேதி இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்கவிருக்கிறார்கள். இது குறித்து அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

"What shoot this month" Sivakarthikeyan's "Don"! Awesome update!

People looking for online information on Sivakarthikeyan will find this news story useful.