www.garudabazaar.com

போடு வெடிய.. 'டாக்டர்', படத்தின் மரண மாஸ் ரிலீஸ் அப்டேட்! எதுல?...எப்போ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நெல்சன் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் 'டாக்டர்'.

sivakarthikeyan in Doctor movie Release update

ப்ரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

sivakarthikeyan in Doctor movie Release update

இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முழுமையாக முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக இருந்த நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. ஒடிடி தளங்களில் வெளியிடுவது தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடந்து வந்தது. இடையில் தளர்வுகள் கூடிய ஊரடங்கில் திரையரங்குகள் திறக்கப்பட்ட போது, தியேட்டர்களிலே வெளியிட்டுவிடலாம் என்றும் பேச்சு அடிப்பட்டது.

sivakarthikeyan in Doctor movie Release update

படம் நிறைவடைந்து ஓராண்டுக்கும் மேலாக வெளியாகாமல் இருப்பதால் தயாரிப்பாளர்கள் ஒரு முடிவை எடுத்துள்ளனர். ஏற்கனவே இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்தது போல டிஸ்னி ஹாட்ஸ்டார் குழுவுடன் திரைப்படக்குழு நேரடியாக ஒப்பந்தம் செய்து விட்டதாக தெரிகிறது.

விரைவில் படத்தை ஹாட்ஸ்டார் இல் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் எதிர்பார்க்கலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

sivakarthikeyan in Doctor movie Release update

People looking for online information on Doctor, Sivakarthikeyan will find this news story useful.