www.garudabazaar.com

“வாடிவாசல்” திரைப்படம் பற்றி 'பிரேமம்' இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் என்ன சொன்னார் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான “நேரம்” என்ற படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்.

what director alphonse puthren tells about vadivaasal

2015 ஆம் ஆண்டு வெளியாகி மலையாள திரையுலகில் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டாக அமைந்த ‘பிரேமம்’ படத்தை கடைசியாக அல்போன்ஸ் புத்ரன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக, சாய்பல்லவி, மடோனா செபாஸ்டியன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தனர்.

what director alphonse puthren tells about vadivaasal

அல்போன்ஸ் புத்திரன் மலையாள இயக்குனராக இருந்தாலும் தமிழ் சினிமாவை தொடர்ந்து கவனித்து வருபவர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமலஹாசன் ஆகிய இருவருக்கும் நன்றி சொல்லி தான் ‘பிரேமம்’ படத்தை ஆரம்பித்து இருப்பார். அந்த அளவுக்கு தமிழ் சினிமாவின் மீது ஆர்வம் கொண்டவர்.

what director alphonse puthren tells about vadivaasal

சமீபத்தில் கூட ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தின் 30வது ஆண்டுவிழாவை முன்னிட்டு, அந்த படம் பற்றி உலகநாயகன் கமலஹாசனிடம் முகநூல் வழியாக படத்தின் நுணுக்கங்கள் மற்றும் வேலைப்பாடுகள் பற்றி கேட்க, அதற்கு கமல்ஹாசனின் பதில்கள் அனைத்தும் சினிமா பற்றி அறிந்து கொள்ள ஆசைப்படுபவர்களுக்கு நல்ல தீனியாக அமைந்தன.

what director alphonse puthren tells about vadivaasal

இந்நிலையில் ‘வாடிவாசல்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை பகிர்ந்து, “ ரத்தினக்கல் போன்ற இந்த மிகச்சிறந்த படத்தையும் பார்க்க காத்திருக்கிறேன்” என்று  முகநூலில் குறிப்பிட்டுள்ளார், இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்.

 

'வாடிவாசல்' படத்தினை நடிகர் சூர்யாவை வைத்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்க, கலைப்புலி தானு தயாரிக்கிறார். 

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

what director alphonse puthren tells about vadivaasal

People looking for online information on Alphonse Putharen, Anupama Parameshwaran, Kalaipuli S. Dhanu, Kamal Haasan, Madonna Sebastian, Premam, Sai Pallavi, Surya, Vaadivaasal, Vetri Maaran will find this news story useful.