www.garudabazaar.com

இதெல்லாம் ஒரு காரணமா?... யாரு யாரை 'நாமினேட்' பண்ணிருக்காங்கன்னு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் முதல் நாமினேஷன் புராஸஸ் வெற்றிகரமாக தொடங்கி விட்டது. ஏற்கனவே ஹார்ட் டாஸ்க் கொடுத்து அதில் தேர்வான 8 போட்டியாளர்களில் தலைவர் என்பதால் சுரேஷ் தவிர பிற போட்டியாளர்களை நாமினேட் செய்யலாம் என பிக்பாஸ் தெரிவித்தார். அந்த வகையில் சனம் ஷெட்டி, ஷிவானி, ரேகா, ஆஜித், ரம்யா பாண்டியன், சம்யுக்தா, கேப்ரியலா ஆகிய 7 பேரும் இந்த பட்டியலில் இணைந்தனர்.

Week 1 Nomination Process Started in Bigg Boss house

இதில் பெரும்பாலான போட்டியாளர்கள் சொல்லி வைத்தது போல சனம் ஷெட்டியை நாமினேட் செய்தனர். அதற்கு அடுத்த இடம் ஷிவானிக்கு. பேசாதது எல்லாம் ஒரு காரணமா இல்லை வலிமையான போட்டியாளராக ஷிவானி உருவெடுத்து விடுவார் என்ற பயமா? என்பது தெரியவில்லை. எப்படியும் ஓட்டு போட்டு ஆர்மி காப்பாற்றி விடும் என்பதால் அதுகுறித்து பெரிதாக நாம் கவலைப்பட தேவையில்லை. அதற்கு அடுத்து சம்யுக்தா, ரேகா அதிகமான பேரால் நாமினேட் செய்யப்பட்டனர்.

ஆஜித், கேப்ரியலா, ரம்யா பாண்டியன் ஆகிய மூன்று பேரையும் குறைவான பேரே நாமினேட் செய்தனர். ஆனால் பெரும்பாலான போட்டியாளர்கள் நாமினேஷனுக்கு சொன்ன காரணம் தான் மொக்கையாக இருந்தது. ரம்யா பாண்டியன் பேச மாட்டேன் என்கிறார் என வேல்முருகன் அவரை நாமினேட் செய்தார். மாடலிங் பிரச்சினை இன்னும் தீரவில்லை போல. பாலாஜி சனம் - சம்யுக்தா இருவரையும் நாமினேட் செய்தார். சனம், ரேகாவை நாமினேட் செய்த ஆரி மக்கள் தீர்ப்பு அளிக்கட்டும் என்றார்.

சம்யுக்தா 4 வயது குழந்தையை விட்டு வந்ததால் அவரை நாமினேட் செய்வதாக ரேகா காரணம் சொன்னார். (அறந்தாங்கி நிஷாவும் குழந்தையை விட்டு வந்திருக்கிறார் என்பது தெரியவில்லையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்) சுரேஷை நாமினேட் செய்ய நினைத்து அது முடியாது என்பதால் ஆஜித், சனம் இருவரையும் நாமினேட் செய்வதாக நிஷா தெரிவித்தார். இவர்கள் நாமினேட் செய்ய சொன்ன காரணங்களை கேட்ட ரசிகர்கள் இதெல்லாம் ஒரு காரணமா? என கிண்டல் செய்து வருகின்றனர்.

யார் யாரை நாமினேட் செய்தார்கள் என்பதை கீழே பார்க்கலாம்:-

1. ரியோ- ஷிவானி,சனம் 2. சனம் ஷெட்டி- சம்யுக்தா, கேப்ரியலா 3. ரேகா- சம்யுக்தா, ரம்யா பாண்டியன் 4. பாலாஜி - சனம், சம்யுக்தா 5. அனிதா- சம்யுக்தா, ஷிவானி 6. ஷிவானி- சனம், ரேகா 7. ரமேஷ்- சனம், ஷிவானி  8. வேல்முருகன்- ரம்யா பாண்டியன், கேப்ரியலா 9. சோமசேகர் - ஷிவானி, ரேகா 10. ஆரி- சனம், ரேகா 11. கேப்ரியலா - சனம், சம்யுக்தா 12. நிஷா- சனம், ஆஜித் 13. ரம்யா பாண்டியன் - சனம், ரேகா 14. சம்யுக்தா- சனம், ஷிவானி 15. சுரேஷ் - ஆஜித்-சனம் 16.ஆஜித்-சனம், ஷிவானி.

தொடர்புடைய இணைப்புகள்

Week 1 Nomination Process Started in Bigg Boss house

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.