www.garudabazaar.com

இந்த வாரம் ரெண்டு 'குறும்படம்' போடணும்... யாருக்கு? எந்த விஷயத்துல?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த சில நாட்களாக பிக்பாஸ் வீடு யுத்தக்களமாக மாறியிருக்கிறது. ஆரி தனியாக சொன்னதை பொதுவில் போட்டுக்கொடுத்து பாலா அனைவரையும் அவருக்கு எதிராக திருப்பினார். இதனால் நேற்று முன்தினம் புயலுக்கு பிந்தைய நிலையில் பிக்பாஸ் வீடு இருந்தது. நேற்று பாலாஜி-அர்ச்சனா பேசியதில் காண்டான கேப்ரியலா அவரை நேருக்கு நேர் நறுக்கென கேட்டு விட்டார்.

'We Want Kurumpadam' fans requested to Kamal Haasan

இதனால் சக போட்டியாளர்கள் அனைவரும் வண்டியை திடீரென பாலாஜி பக்கம் திருப்ப, அவர் எஸ்கேப் ஆகி சென்று விட்டார். ஆனால் தொடர்ந்து சம்யுக்தா ஆரி சண்டையில் அவர் மூக்கை நுழைத்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல சனம், சம்யுக்தாவிடம் பேசியபோது அவர் மீண்டும் வளர்ப்பு சரியில்லை என சொல்ல ஆரி-சம்யுக்தா இருவருக்கும் சண்டை மூண்டது.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் பாலாஜி முருகதாஸ், சம்யுக்தா இருவரும் நிறைய மாற்றி,மாற்றி பேசுகின்றனர். அவர்கள் இருவருக்கும் கண்டிப்பாக இந்த வாரம் குறும்படம் போடணும் என, கமல்ஹாசனை டேக் செய்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். நிகழ்ச்சி தொடங்கி 50 நாட்களுக்கு மேல் ஆகியும் கூட, இதுவரை எந்தவொரு குறும்படமும் ஒளிபரப்பு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய இணைப்புகள்

'We Want Kurumpadam' fans requested to Kamal Haasan

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.