www.garudabazaar.com

எந்த கேள்விக்கும் 'பதில்' சொல்ல முடியல... இப்புடித்தானே 'அவருக்கும்' இருந்துருக்கும்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் கொளுத்தி போட்ட அணுகுண்டு நன்றாகவே வேலை செய்தது. டெலிகாலர் டாஸ்க் என ஒன்றை கொடுத்து போட்டியாளர்களை இரண்டு குழுக்களாக பிரிய செய்தார். இதில் பாலாஜி, ஆஜீத், கேப்ரியலா, சம்யுக்தா, ஷிவானி, ஜித்தன் ரமேஷ், அனிதா  ஆகியோர் ஒரு குழுவாகவும் அர்ச்சனா, ஆரி, ரம்யா, ரியோ, நிஷா, சோம், சனம் ஒரு குழுவாகவும் பிரிந்தனர்.

Gabriella accused Balaji Murugadoss, Twitter Reacts

முதலில் பாலாவுக்கு போன் செய்த அர்ச்சனா அவரிடம் தன்னுடைய கேள்விகளை முன்வைக்க சோம், ரியோ, கேப்ரியலா மூவரையும் முன்வைத்து அவர் விளையாடுவதாக பாலாஜி தெரிவித்தார். வழக்கம்போல இதை அகம் டிவியில் ஒளிபரப்பி பிக்பாஸ் அதற்கு பெட்ரோல் ஊற்றி எரிய வைத்தார். தொடர்ந்து கேப்ரியலா பின்னர் பாலாஜியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினார்.

அப்போது அர்ச்சனா, ரியோ, ஆஜீத், கேப்ரியலா என பலரும் சுற்றி வளைத்து கேள்வி கேட்க பாலாஜியால் பதில் சொல்ல முடியவில்லை. நேரடியாக கேப்ரியலா, பாலாஜி மாற்றி, மாற்றி பேசுகிறார் என ஆதாரத்துடன் விளக்க பாலாஜி ஆடிப்போய் விட்டார். கடைசி வரை அவர் கேப்ரியலா கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்பார்த்த ரசிகர்கள் இப்படித்தானே ஆரிக்கும் பண்ணீங்க? இப்போ எப்படி இருக்கு? என அவரை கிண்டலடித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Gabriella accused Balaji Murugadoss, Twitter Reacts

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.