''முட்டாளாக்க பார்க்குறோம்னு வரமாட்டாங்க, அப்புறம்...'' - சீக்ரெட் சொல்லும் விஷ்ணு விஷால்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஷ்ணு விஷால் தற்போது 'எஃப்ஐஆர்' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தை மனு ஆனந்த் இயக்க, இயக்குநர் கௌதம் மேனன், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், கௌரவ் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Vishnu Vishal shares a funny experience about April 1 | விஷ்ணு விஷால் தனது சகோதரர் ருத்ரா குறித்து சுவாரஸியத் தகவல்

இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் அவரது தம்பியின் புகைப்படம் வெளியிட்டு எழுதியுள்ள பதிவில், ''பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி ருத்ரா. இன்று ஏப்ரல் 1. ருத்ரா சிறுவனாக இருக்கும் போது அவனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அவனது நண்பர்களை கூப்பிடுவோம்.

ஆனால் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் என்பதால் தங்களை முட்டாளாக்க முயற்சிப்பதாக நினைத்து வரமாட்டார்கள். பின்னர் அவர்களிடம் ஃபோன் செய்து உண்மையை எடுத்துச்சொல்லி புரிய வைப்போம்'' என்றார்.

Entertainment sub editor