கொரோனா தடுப்பில் அதிரடி காட்டும் ஐ.ஏ.எஸ் ஆபீசர்..! காரணம் இதுதான் - பிரபல இயக்குநர் பாராட்டு.
முகப்பு > சினிமா செய்திகள்இயக்குநர் இரா.சரவணன் கொரோனா நேரத்தில் சிறப்பாக பணி செய்யும் அதிகாரியை பாராட்டியுள்ளார்.

கத்துக்குட்டி படத்தை இயக்கியவர் இரா.சரவணன். இத்திரைப்படத்தில் நரேன், சூரி, ஷ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டோர் நடித்தனர். விவசாயப் பிரச்சனைகளை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவானது. இதையடுத்து இவர், சசிகுமார், ஜோதிகா நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், ''கொரோனா தடுப்பில் புள்ளி விவரங்களை விரல் நுனியில் வைத்து இயங்கும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் #பீலாராஜேஷ் MBBS படித்து அதன் பிறகு IAS முடித்தவர். மருத்துவம் படித்தவரை மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு நியமித்ததால் அதிரடியாகவும் ஆக்கபூர்வமாகவும் இருக்கிறது அவர் பணி. பாராட்டுவோம்!'' என தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பில் புள்ளி விவரங்களை விரல் நுனியில் வைத்து இயங்கும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் #பீலாராஜேஷ் MBBS படித்து அதன் பிறகு IAS முடித்தவர். மருத்துவம் படித்தவரை மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு நியமித்ததால் அதிரடியாகவும் ஆக்கபூர்வமாகவும் இருக்கிறது அவர் பணி. பாராட்டுவோம்! pic.twitter.com/nnT6A45sKs
— இரா.சரவணன் (@erasaravanan) April 1, 2020