தமிழகத்தில் வேகமாக பரவுகிறதா கொரோனா ? - புள்ளி விவரம் பகிர்ந்து விஷ்ணு விஷால் எச்சரிக்கை
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா வைரஸ் எளிதில் பரவக்கூடியது என்பதால் மக்கள் அனைவரும் அவசியமில்லாமல் வெளியில் வரவேண்டாம் என அரசு அறிவித்துள்ளது. இத்தாலி, அமெரிக்கா போல இந்தியாவில் சமூக பரவலாக மாறிவிடக் கூடாது என்பதற்காக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் கணிசமாக உயர்ந்து வருகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரபலங்கள் பலரும் சமூக வலதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஷ்ணு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவுதலை ஒப்பிட்டு புள்ளிவிவரம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் மிக வேகமாக பரவுவது போல் காட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த பதிவில் விஷ்ணு விஷால் குறிப்பிட்டுள்ளதாவது, ''மெதுவாக கட்டுப்பாட்டை இழந்து வருகிறது. இந்தியா தயவுசெய்து நிலமையின் தீவிரத்தை புரிந்துகொள்ளுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.
😩😩guys its going out of control slowly.
INDIA please understand the sriousness. https://t.co/LtBOillKCx
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) April 2, 2020