COBRA D Logo Top
www.garudabazaar.com

18 ஆயிரம் அடி உயரத்தில் நடிகர் அஜித் குமார் பைக் ரைடு.. இமயமலையில் இருந்து வெளியான சூப்பர் PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித், இமயமலையில் உள்ள லடாக் பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

Actor Ajith Kumar AK Bike Ride at Taglang La Ladakh Leh

Also Read | ஆர்யா நடிக்கும் Sci-fi திரைப்படம் 'கேப்டன்'.. சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட்!

நடிகர் அஜித் தனது திரைப்பட படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் பைக்கை எடுத்துக்கொண்டு ரோட் ட்ரிப் போவது வாடிக்கையான ஒன்று. அது போல் அஜித் BMW  பைக்கை எடுத்துக்கொண்டு   ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன் பயணம் மேற்கொண்டார்.

ஐரோப்பா நாடுகளில் குறிப்பாக பெல்ஜியம், பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளில் இந்த பைக் சுற்றுப்பயணம்  நடந்தது.

Actor Ajith Kumar AK Bike Ride at Taglang La Ladakh Leh

ஐரோப்பிய பைக் சுற்றுப்பயணத்துக்கு பின் நடிகர் அஜித்,  AK61 படத்தின் விசாகப்பட்டினம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் நடிகர் அஜித், விசாகப்பட்டினம் படப்பிடிப்பை நிறைவு செய்து, தற்போது தனது நண்பர்களுடன் இமயமலையில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

Actor Ajith Kumar AK Bike Ride at Taglang La Ladakh Leh

இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மணாலி, ரோதாங் பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

Actor Ajith Kumar AK Bike Ride at Taglang La Ladakh Leh

தற்போது அஜித், தனது நண்பர்களுடன் ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள தங்லங் லா பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த தங்லங் லா பகுதி 17,480 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சரியாக 5.32 கி.மீ உயரமானது. லே மற்றும் மணாலி நெடுஞ்சாலையில் இந்த ஊர் அமைந்துள்ளது. உலகின் சாகசமிக்க சாலைகளில் இந்த நெடுஞ்சாலை முக்கியமானது.

Actor Ajith Kumar AK Bike Ride at Taglang La Ladakh Leh

இந்த புகைப்படங்களை அஜித்தின் நண்பரும் சக பைக் ரைடருமான சுப்ரஜ் வெங்கட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Actor Ajith Kumar AK Bike Ride at Taglang La Ladakh Leh

Also Read | சமந்தா நடிக்கும் PAN INDIA படம் 'யசோதா'.. டீஸர் ரிலீஸ் எப்போ? அதிரடியான போஸ்டர்!

தொடர்புடைய இணைப்புகள்

Actor Ajith Kumar AK Bike Ride at Taglang La Ladakh Leh

People looking for online information on Ajith Kumar, Ajith Kumar AK Bike Ride, Taglang La Ladakh Leh will find this news story useful.