www.garudabazaar.com

‘விக்ரம் வேதா’ இந்தி ரீமேக்.. மாதவன் - விஜய் சேதுபதி ரோலில் யார்னு பாருங்க! மாஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தமிழ்த் திரைப்பட இரட்டை இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி எழுதி இயக்கிய மாபெரும் வெற்றித்திரைப்படம் 2017-ஆம் ஆண்டில் வெளியான‘விக்ரம் வேதா’.

vikram vedha hindi remake release hrithik roshan saif ali khan

முற்றிலும் புதிய பாணியில் உருவாகி வெளியான இந்த அதிரடி திரில்லர் படத்தில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் பெயர் சொல்லும் வேடங்களில் நடித்தனர். ஆம், உண்மையில் அவை இரண்டுமே விக்ரம் மற்றும் வேதா என பெயர்களை மையமாகக் கொண்ட கதாபாத்திரங்கள்.

விக்ரமாதித்யன், வேதாளம் எனும் இருவேறு மித்தாலஜிக்கல் கதாபாத்திரங்களை நினைவுபடுத்தும் இந்த கதையில், நடித்த மாதவன், விஜய் சேதுபதியுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், கதிர், வரலக்ஷ்மி சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.இந்நிலையில் விக்ரம் வேதா இந்தி ரீமேக்கில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் சையஃப் முறையே மாதவன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

ஒய் நாட் ஸ்டுடியோஸால் தயாரிக்கப்பட்ட இந்த படத்தில் சாம் சி.எஸ் இசையமைத்தார். இந்நிலையில் இந்த பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படத்தின் இந்தி ரீமேக் திரைப்படம் செப்டம்பர் 30, 2022 அன்று திரையரங்குகளில் வரவுள்ளது. மேலும் சில விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: விஜய் சேதுபதி - கமல் - ஃபகத் ஃபாசில்.. வேற மாரி வெளியான  #VikramFirstLook !

vikram vedha hindi remake release hrithik roshan saif ali khan

People looking for online information on Hrithik Roshan, Pushkar Gayathri, Saif Ali Khan, Vikram Vedha will find this news story useful.