Viruman Logo Top
www.garudabazaar.com

விக்ரம் நடிப்பில் உருவான கோப்ரா.. படத்தின் ரிலீஸ் எப்போ??.. புது போஸ்டருடன் வெளியான அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள 'கோப்ரா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

Vikram starrer cobra release date annoounced officially

Also Read | இது தான் பஹத் பாசிலோட செல்லப் பெயரா? நஸ்ரியாவின் இன்ஸ்டா ஸ்டோரியால் வெளிவந்த தகவல்!

டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி, மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் அடைந்தவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து. விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள கோப்ரா திரைப்படத்தையும் அஜய் தான் இயக்கி உள்ளார். லலித் குமார் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கோப்ரா படத்தில் நடிகர் விக்ரமுடன் கேஜிஎஃப் புகழ் ஸ்ரீநிதி செட்டி, கே.எஸ். ரவிக்குமார், இர்பான் பதான், மிருணாளினி ரவி, ரோஷன் மேத்தியூஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழாவும் சமீபத்தில் நடைபெற்று இருந்தது.

Vikram starrer cobra release date annoounced officially

கோப்ரா படத்தில் இடம்பெற்றுள்ள தும்பி துள்ளல், அதீரா உள்ளிட்ட அனைத்து பாடல்களும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படத்தின் ரீலீஸையும் ரசிகர்கள் எதிர்நோக்கி காத்து வருகின்றனர். முன்னதாக, கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Vikram starrer cobra release date annoounced officially

இதனைத் தொடர்ந்து, கோப்ரா படத்தின் ரிலீஸ் தள்ளி போன நிலையில், தற்போது அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது. அதன் படி, வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று, கோப்ரா திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாக உள்ளதாக புதிய போஸ்டருடன் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Vikram starrer cobra release date annoounced officially

மேலும், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகளில் கோப்ரா ரிலீஸ் ஆக உள்ளதையும் படக்குழு அறிவித்துள்ளது. இதனால், படத்தின் ரிலீஸ் நாளை நோக்கி ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Also Read | ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி-2.. வடிவேலுவின் BTS வீடியோவுடன் வெளியான தெறி அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Vikram starrer cobra release date annoounced officially

People looking for online information on Cobra, Cobra Movie Release Updates, Vikram will find this news story useful.