www.garudabazaar.com

திடீர் ஹார்ட் அட்டாக் .. நடிகர் விக்ரம் மேனேஜருக்கு என்ன ஆச்சு?.. பரபரப்பு தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விக்ரம், தமிழ் திரையுலகில் சீயான் விக்ரம் என்று அறியப்படும் முன்னணி நடிகர்.

vikram manager got heart attack and recovered விக்ரம்

இயக்குனர்கள் பாலா, ஷங்கர் என தமிழ் சினிமாவின் முன்னணி ஹிட் பட இயக்குனர்களின் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் விக்ரம், ஏராளமான ரசிகர்களை தனது நடிப்பாற்றலால் கவர்ந்தவர். தனக்கே உரிய பாணியில் உடலை, ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஏற்ப தகவமைத்துக் கொள்வதில் வல்லவரான விக்ரம் அனைவரிடமும் எளிமையாக பேசக்கூடியவர், பழகக்கூடியவர்.

அண்மையில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் விக்ரம் முன்னதாக, கடாரம் கொண்டான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் 2019-ல் வெளியானது.

நடிகர் கமல்ஹாசனின் தூங்காவனம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ராஜேஷ். எம். செல்வா, ‘கடாரம் கொண்டான்’ திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த நிலையில் விக்ரமின் அடுத்த திரைப்படங்கள் குறித்த ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதனிடையே நடிகர் விக்ரமின் மேனேஜரான சூரிய நாராயணன் என்பவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதாகவும், பைபாஸ் சர்ஜரி செய்து காவேரி மருத்துவமனையில் இருக்கும் இவர் தற்போது நலமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Also Read: மாஸ் தான்.. ‘விக்ரம்’ படத்தில் இவர் ஒருத்தருக்கு ஜோடியாக 3 நடிகைகளா?. யார் யார் தெரியுமா?

Tags : Vikram

தொடர்புடைய இணைப்புகள்

vikram manager got heart attack and recovered விக்ரம்

People looking for online information on Vikram will find this news story useful.