www.garudabazaar.com

“bulb எரியுதா?.. நேர்ல வந்து பேசுங்கடா!”.. ‘வக்கிரமான கமெண்டுகளுக்கு’.. விஜயலட்சுமி பதிலடி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் அகத்தியனின் மகளும், பிரபல நடிகையுமானவர் விஜயலட்சுமி.

vijayalakshmi slams perverts derogatory commentors

இவர் சென்னை -28, அஞ்சாதே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது சகோதரிகள் தான் கனி மற்றும் நிரஞ்சனி. இவர்களுள் கனி தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2வது சீசனில் டைட்டில் வென்றார். கனியின் கணவர் தான்  ‘தீராத விளையாட்டு பிள்ளை’, ‘நான் சிகப்பு மனிதன்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் திரு.

இதே போல் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்ற நிரஞ்சனி அகத்தியன், அத்திரைப்படத்தின் இயக்குநரான தேசிங் பெரியசாமியை மணந்தார். நிரஞ்சனியின் திருமண விசேஷத்தில் விஜயலட்சுமி தன் சகோதரிகளுடன் தோன்றிய வீடியோ வைரலானது.

இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி தமது சமூக வலைதளத்தில் தன் மகனுக்கு பாசத்துடன் முத்தமளித்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த பலரும், ‘அன்பை பரிமாறும் தருணம்’, ‘அழகு’ என பாசிடிவான கமெண்டுகளை கொத்துள்ளனர்.

ஆனால் சிலர், அநாகரீகமாக கமெண்டுகளையும் பதிவிட்டுள்ளனர். அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து விஜயலட்சுமி பகிர்ந்துள்ள ட்வீட் பரவி வருகிறது.

அதில் விஜயலட்சுமி பேசும்போது, “ஓ.. கொழந்த கிட்ட பண்ண வேண்டிய அட்டூழியங்கள் னு ஒரு fantasy list வெச்சு இருக்கியா.பரதேசி. இத பாத்த உடனே bulb எரியுதா.நீங்க எல்லா நேர்ல வந்து பேசுங்க டா.அழுக்கு ஜென்மங்கள்.இதுல அப்பாடக்கர் மாதிரி tweets. இது கூட சேந்து discuss பண்ண இன்னோரு  எச்ச. அடேய் aprasidingala” என வெளுத்து கட்டியுள்ளார்.

விஜயலட்சுமியின் இந்த துணிச்சலான பதிலடியை பலரும் பாராட்டி வருவதுடன், அந்த மாதிரி அநாகரீகமாக பேசியவர்களுக்கு கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.

ALSO READ: "கத கேக்கும்போது Hero-னு நெனைச்சு ஏமார்ந்துடுவேன்!".. முதல் பட பூஜை.. அஸ்வின் உருக்கம்!

“BULB எரியுதா?.. நேர்ல வந்து பேசுங்கடா!”.. ‘வக்கிரமான கமெண்டுகளுக்கு’.. விஜயலட்சுமி பதிலடி! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

vijayalakshmi slams perverts derogatory commentors

People looking for online information on Vijayalakshmi, Vijayalakshmi Ahathian will find this news story useful.