www.garudabazaar.com

"Survivor Show-ல" நம்ம அனிகா இருக்காங்களா? - உண்மை என்ன?.. Live-ல் அவங்களே சொன்ன பதில்.. viral ஆகும் video!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி மாஸ் நடிகரான ‘தல’ அஜித் குமார் நடித்த திரைப்படங்கள் என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம்.

is Anikha Surendran in survivor show her answer video அனிகா

இந்தத் திரைப்படங்களில் தல அஜித்துக்கு மகளாக நடித்தவர்தான் அனிகா சுரேந்திரன். அவ்வப்போது பலவிதமான வைரல் ஃபோட்டோ ஷுட்கள் மூலம் இணையத்தில் ட்ரெண்டாகும் நடிகை அனிகா சுரேந்திரன். தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்வதாக வெளியான பேச்சுகளுக்கு தன்னுடைய நேரலை வீடியோவில் பதில் அளித்து விளக்கியிருக்கிறார்.

is Anikha Surendran in survivor show her answer video அனிகா

பிரபல சின்னத்திரை தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிற புத்தம் புதிய ரியாலிட்டி ஷோ சர்வைவர். தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரும், ஆக்ஷன் கிங் என பெயர் பெற்றவருமான அர்ஜுன் இந்த ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்குகிறார். எப்போதும் உறுதியான உடலுடன் துடிப்பான பேச்சுடன் நம்மிடையே தோன்றும் அர்ஜுன் தன்னுடைய பாணியிலேயே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

is Anikha Surendran in survivor show her answer video அனிகா

இது தொடர்பான ப்ரோமோவும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அத்துடன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகவிருக்கும் இந்த சர்வைவர் ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். டிராமா கொஞ்சம் உண்மை கொஞ்சம் என கலந்து ரியாலிடி ஷோவாக ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் நடிகர் விக்ராந்த், நடிகை விஜயலட்சுமி என பலரும் கலந்து கொள்கின்றனர்.

இதில்தான் அனிகா சுரேந்திரன் கலந்து கொள்கிறாரா? என்கிற பேச்சு எழுந்து வந்தது. இந்த நிலையில் இதுபற்றி நேரலையில் ரசிகர்களுடன் உரையாடிய அனிகாவிடம் ரசிகர் ஒருவர் கேட்டிருக்கிறார். அதற்கு பதிலளித்த அனிகா சுரேந்திரன், “நான் இந்த ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கிறேனா?.. நிச்சயமாக இல்லை.. நான் எந்த ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்கவில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

is Anikha Surendran in survivor show her answer video அனிகா

மேலும் அனிகா சுரேந்திரன் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அளித்துள்ள சுவாரசியமான பதில்களை இணைப்பில் இருக்கும் வீடியோவில் முழுமையாக காணலாம்.

"SURVIVOR SHOW-ல" நம்ம அனிகா இருக்காங்களா? - உண்மை என்ன?.. LIVE-ல் அவங்களே சொன்ன பதில்.. VIRAL ஆகும் VIDEO! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

is Anikha Surendran in survivor show her answer video அனிகா

People looking for online information on ActionKing, Ajith Kumar, Anikha Surendran, Arjun, ZeeTamil will find this news story useful.