விருது விழாவில் சிவாங்கி.. "ரியாக்ஷன் குயீன்ப்பா".. ஒட்டுமொத்த Cuteness-ம் ஒரே Video-ல!
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸை அடுத்து, விஜய் டிவியில் மிகவும் விரும்பப்பட்ட மற்றும் அதிகம் பார்க்கப்பட்ட ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி.

இந்நிகழ்ச்சியின் 2வது சீசனில் கலந்துகொண்ட பெரும் எண்டர்டெயினராக அனைவரையும் கவர்ந்தவர் சிவாங்கி.
பிரபல சந்திரமுகி படத்தில் வரும் ‘ரா ரா’ பட பாடகி பின்னி கிருஷ்ணகுமாரின் மகளான சிவாங்கி, சூப்பர் சிங்கராக விஜய் டிவியில் தோன்றினாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம மக்களிடையே செல்லப்பிள்ளையாகவே மாறினார்.
தற்போது சிவாங்கி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவும் தொடங்கியுள்ள சிவாங்கி, இதுகுறித்த தகவலை அவரே சமீபத்தில் பதிவிட்டிருந்தார்.
இதேபோல், சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் திரைப்படம், உதயநிதி நடிக்கும் ஆர்டிகள்15 திரைப்படம் ஆகிய படங்களில் சிவாங்கி நடிக்கிறார்.
இடையில் கவின் நடிப்பில் வெளியான அஸ்குமாரோ பாடலில் பாடி நடித்துள்ள சிவாங்கி, அஸ்வின் நடித்த அடிபொலி பாடலையும் பாடினார்.
முன்னதாக பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு ஐகான்ஸ் - டெலிவிஷன், டிஜிட்டல் மற்றும் சோஷியல் விருதுகள் வழங்கும் விழாவில், கலந்துகொண்டு, குக் வித் கோமாளி மூலம் பிரபலமான அஸ்வினின் கைகளால், சிவாங்கி விருது பெற்றிருந்தார். இதே நிகழ்வில் அஸ்வினுடன் இணைந்து சிவாங்கி நடனமும் ஆடியிருந்தார். அஸ்வின், இந்த நிகழ்வில் "MOST POPULAR PERSON ON REALITY TELEVISION - MALE FOR COOKU WITH COMALI" என்கிற விருதினை பெற்றிருந்தார்.
அஸ்வின் போலவே, அவரது தோழியான சிவாங்கி, இந்த விருது நிகழ்வில் "MOST POPULAR PERSON ON REALITY TELEVISION - FEMALE FOR COOKU WITH COMALI" என்கிற விருதை, அஸ்வின் கையால் சிவாங்கி பெற்றார். இந்த விருதை பெற்ற பிறகு இந்த நிகழ்வின் படங்களைப் பகிர்ந்த சிவாங்கி, “இந்த விருதுக்கு நன்றி behindwoods.
என்னை ஊக்குவித்ததற்கும், ஊக்குவிப்பதற்கும் இந்த விருதை ரவூஃபா மேடம் மற்றும் மீடியா மேசன்ஸ் குழுவுக்கு அர்ப்பணிக்கிறேன். ஒரு சிறந்த தளமாக இருப்பதற்கும் வாய்ப்புகளை வழங்குவதற்கும் நன்றி விஜய் டிவி. இறுதியாக அஸ்வினேய் (அஸ்வின் குமார்), உங்களிடமிருந்து இந்த விருதைப் பெறுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
நான் சந்தித்த மிக அற்புதமான நபர்களில் நீங்களும் ஒருவர். நீங்கள் மிக உயரத்தை அடைய வாழ்த்துகிறேன். மேலும் உங்கள் விருதுக்கு வாழ்த்துக்கள். தேங்க்யூ மக்களே .. நீங்கள் இல்லமல் நாங்க யாருமே இல்லை. உங்கள் ஆதரவுக்கு ரொம்ப நன்றி” என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு ஐகான்ஸ் - டெலிவிஷன், டிஜிட்டல் மற்றும் சோஷியல் விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு சிவாங்கி ஸ்டேஜின் கீழ் பார்வையாளர் வரிசையில் அஸ்வின், சாண்டி, கவின் ஆகியோருடன் அமர்ந்திருக்கும்போது கொடுத்த ரியாக்ஷன்கள், செய்த குட்டி குட்டி சேட்டைகள், முக பாவனைகள் அனைத்தையும் இணைப்பில் உள்ள இந்த ஒரு வீடியோவில் அழகாய் தொகுக்கப்பட்டுள்ளன.
விருது விழாவில் சிவாங்கி.. "ரியாக்ஷன் குயீன்ப்பா".. ஒட்டுமொத்த CUTENESS-ம் ஒரே VIDEO-ல! வீடியோ