இன்ஸ்டண்ட் Chartbuster ஹிட் ‘பத்தல பத்தல’… 24 மணிநேரத்துக்குள் இத்தனை மில்லியன்ஸ் வியூஸா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் படத்தின் பத்தல பத்தல முதல் சிங்கிள் பாடல் இணையத்தில் பரவலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Vikram Pathala Pathala crossed 24 million views

Also Read | "Climax-ல கீர்த்தி சுரேஷ இப்படி காட்ட நெனச்சோம்" - சாணி காயிதம் பெண் ஒளிப்பதிவாளர்!

கமலின் விக்ரம்…

கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு  ‘விக்ரம்’ உருவாகி வருகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இதனால் இந்த படத்தின் மீது எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இதையடுத்து விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி 5 மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

Vikram Pathala Pathala crossed 24 million views

கமல் - அனிருத் கலக்கல் காம்போ…

இந்த படத்தின் மூலம் இரண்டாவது முறையாக கமல்- அனிருத் கூட்டணி இணைந்துள்ளது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படம் உருவாக்கத்தில் உள்ளது. இந்நிலையில் விக்ரம் படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பத்தல பத்தல’ பாடல் நேற்று இரவு 7 மணிக்கு வெளியானது. இந்த பாடலைக் கமலே எழுதிப் பாடியுள்ளார். இது கமல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பாடல் வெளியான பின்னர் சமூகவலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Vikram Pathala Pathala crossed 24 million views

பத்தல பத்தல ஹிட்…

இந்த பாடல் கமலின் ஹிட் பாடலான அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்ற ‘அண்ணாத்த ஆடுறார்’ பாடலை நினைவூட்டும் விதமாக அமைந்திருந்தது. பாடலில் கமல் தனது பாணியில் வடசென்னை தமிழில் பாடியதும், சில அரசியல் கருத்துகளும் கவனிக்கும் அம்சமாக அமைந்தன. இப்படி பல சிறப்பம்சங்கள் இடம்பெற்ற நிலையில் இந்த பாட்டு மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் சென்று சேர்ந்துள்ளது. வெளியாகி இன்னும் 24 மணிநேரம் கூட ஆகாத நிலையில் பாடலை 10 மில்லியன் பேருக்கு  மேல் யுடியூபில் மட்டும் பார்த்துள்ளனர். இதை சோனி மியுசிக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Vikram Pathala Pathala crossed 24 million views

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

இன்ஸ்டண்ட் CHARTBUSTER ஹிட் ‘பத்தல பத்தல’… 24 மணிநேரத்துக்குள் இத்தனை மில்லியன்ஸ் வியூஸா? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vikram Pathala Pathala crossed 24 million views

People looking for online information on Anirudh Ravichander, Fahadh, Kamal Haasan, Lokesh Kanagaraj, Pathala pathala song, Vijay Sethupathi, Vikram Movie will find this news story useful.